News October 29, 2025

வேலூரில் இப்படியா? பேரதிர்ச்சி!!

image

வேலூர் மாவட்டத்தில், கடந்த 10 மாதத்தில் 415 டீனேஜ் பிரசவம் ஆகியுள்ளார். மேலும் மாவட்டத்தில் 59 குழந்தை திருமணம் நடந்துள்ளது என நேற்று (அக்.28) நடந்த மாவட்ட அளவிலான குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர்கள் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டுக்ளது. குழந்தை திருமணத்தை ஒழிக்க அரசு மற்றும் தொண்டு நிறுவனங்களால் பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டாலும், இந்தியாவில் இது ஒரு பொதுவான நிகழ்வாகவே தோன்றுகிறது.

Similar News

News October 29, 2025

வேலூர்: ரூ.20,000 மானியத்தில் இ-ஸ்கூட்டர் வேண்டுமா?

image

1) இ-ஸ்கூட்டர் வாங்க மானியமாக தலா ரூ.20,000 வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. 2) விண்ணபிக்க <>https://tnuwwb.tn.gov.in/<<>> என்ற இணையதளத்திற்கு செல்ல வேண்டும். 3)அதில் Subsidy for eScooter/என்ற ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும். 4) பின்னர் ஆதார்,ரேஷன் அட்டை,ஓட்டுநர் உரிமம் உள்ளிட்ட ஆவணங்களை பதிவேற்றி வேண்டும். 5)விண்ணப்பிக்க தெரியாதவர்கள் இ-சேவை மையங்களில் விண்ணப்பிக்கலாம். (SHARE பண்ணுங்க)

News October 29, 2025

முன்னாள் படைவீரர்கள் குறைதீர்வு கூட்டம்

image

வேலூர் மாவட்டத்தைச் சார்ந்த முன்னாள் படைவீரர்கள் மற்றும் அவர்களை சார்ந்தோர்களுக்கான சிறப்பு குறைதீர்க்கும் கூட்டம் நாளை (அக்.30) மதியம் 01.30 மணிக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக வளாகத்தில் நடைபெறவுள்ளது. இதில் தங்களது குறைகள் மற்றும் கோரிக்கைகளை மனுக்களாக அளித்து பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சியர் சுப்புலட்சுமி கேட்டுக்கொண்டார்.

News October 29, 2025

வேலூர் எஸ்பி தலைமையில் குறை தீர்வு கூட்டம்

image

வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் இன்று (அக்.29) மக்கள் குறைதீர் கூட்டம் நடைபெற்றது. காவல் கண்காணிப்பாளர் மயில்வாகனன் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் பொதுமக்கள் தங்களது கோரிக்கை மனுக்களை அளித்தனர். மனுக்களை பெற்றுக்கொண்ட காவல் கண்காணிப்பாளர் உரிய விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார். கூட்டத்தில் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் பாஸ்கரன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

error: Content is protected !!