News February 16, 2026

வேலூரில் இன்று போக்குவரத்து மாற்றம்!

image

மயான கொள்ளை திருவிழாவையொட்டி வேலூா் மாநகரில் திங்கள்கிழமை போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. சித்தூரிலிருந்து சென்னை மாா்கம் செல்லும் கனரக வாகனங்கள் சித்தூரிலிருந்து காட்பாடி, வள்ளிமலை கூட்ரோட்டில் இடதுபுறம் திரும்பி, சோ்காடு கூட்ரோடு வழியாக ஈ.பி.கூட்ரோடு, திருவலம், சிப்காட், ராணிப்பேட்டை வழியாக தேசிய நெடுஞ்சாலை அடைந்து, தங்களின் பயணத்தை தொடரலாம் என வேலூர் காவல்துறை தெரிவித்துள்ளனர்.

Similar News

News February 16, 2026

வேலூர்: ஹோட்டல், டிபன் கடை தொடங்க ரூ.50,000 கடன்!

image

மத்திய அரசின் அன்னபூர்ணா யோஜனா திட்டத்தின் மூலம் ஹோட்டல், டிபன் கடை, கேட்டரிங் தொழில் தொடங்க பெண்களுக்கு ரூ.50,000 கடன் உதவி வழங்கப்படுகிறது. இந்த கடன் தொகையை திருப்பி செலுத்த 3 ஆண்டுகள் (36 மாதங்கள்) கால அவகாசமும் வழங்கப்படுகிறது. கடனுக்கான முதல் தவணையை செலுத்த தேவையில்லை. மேலும் தகவல்களுக்கு மாவட்ட சமுக நல அலுவலரை தொடர்பு கொள்ளவும்.

News February 16, 2026

வேலூர்: கேஸ் மானியம் ரூ.300 வேண்டுமா?

image

வேலூர் மக்களே, கேஸ் மானியம் ரூ.300 வங்கிக் கணக்கில் நேரடியாக வர வேண்டுமா? அதற்கு<> இங்கு க்ளிக் <<>>செய்து எந்த நிறுவனம் (Bharatgas, indane, HP) என்பதை தேர்ந்தெடுங்க. பின்னர் நுகர்வோர் எண், வங்கி எண், IFSC கோட், ஆதார் ஆகிய விவரங்களை உள்ளிட்டு, OTP மூலம் இணைப்பை உறுதி செய்தால் போதும், மாதந்தோறும் உங்க வங்கி கணக்குக்கு கேஸ் மானியம் வந்துவிடும். இதை மற்றவர்கள் தெரிஞ்சுக்க SHARE பண்ணுங்க

News February 16, 2026

வேலூரில் இன்று டாஸ்மாக் அடைப்பு!

image

வேலூர் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் இன்று (பிப்.16) மயானக் கொள்ளை திருவிழா நடைபெற உள்ளது. இதையடுத்து அலங்கரிக்கப்பட்ட பல்லக்குகள் வீதியுலா நடைபெறும். குற்ற சம்பவங்களை தடுக்கும் வகையில் பழைய குற்றவாளிகளுக்கு போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர். மேலும் சட்டம் மற்றும் ஒழுங்கை பராமரிக்கும் வகையில், 16 டாஸ்மாக் கடைகள் மூடுவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

error: Content is protected !!