News November 1, 2025
வேலூரில் இன்று கிராம சபை கூட்டம்: கலெக்டர்

அனைத்து கிராம ஊராட்சிகளிலும் கிராம சபை கூட்டம் நடத்தப்பட வேண்டுமென தமிழக அரசு தெரிவித்துள்ளது. இதையடுத்து வேலுார் மாவட்டத்திலுள்ள 247 கிராம ஊராட்சிகளிலும் நாளை நவம்பர் 1-ம் தேதி கிராம சபை கூட்டங்கள் காலை 11.00 மணிக்கு தவறாமல் கூட்டப்பட வேண்டுமென அனைத்து வட்டார வளர்ச்சி அலுவலர்களுக்கும் மாவட்ட ஆட்சித்தலைவர் சுப்புலட்சுமி உத்தரவிட்டுள்ளார்.
Similar News
News November 1, 2025
வேலூர்: இழப்பீடாக ரூ.7.10 லட்சம் வழங்க உத்தரவு

திருவள்ளூர் மாவட்டத்தை சேர்ந்தவர் இளையராஜா (37), லாரி டிரைவர். இவர் கடந்த 2020-ம் ஆண்டு திருப்பத்தூர் மாவட்டம் வெங்கிலி அருகே ஏற்பட்ட விபத்தில் இளையராஜா படுகாயமடைந்து மாற்றுத்திறனாளியானார். இதையடுத்து அவர் இழப்பீடு வழங்கக்கோரி வேலூர் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். வழக்கை நீதிபதி இசக்கியப்பன் இளையராஜாவுக்கு ரூ.7.10 லட்சம் இழப்பீடு வழங்க காப்பீடு நிறுவனத்துக்கு நேற்று அக்.31 உத்தரவிட்டார்.
News November 1, 2025
வேலூர்:இன்று கிராம சபை கூட்டம்

அனைத்து கிராம ஊராட்சிகளிலும் கிராம சபை கூட்டம் நடத்தப்பட வேண்டுமென தமிழக அரசு தெரிவித்துள்ளது. இதையடுத்து வேலுார் மாவட்டத்திலுள்ள 247 கிராம ஊராட்சிகளிலும் இன்று நவம்பர் 1-ம் தேதி கிராம சபை கூட்டங்கள் காலை 11.00 மணிக்கு தவறாமல் கூட்டப்பட வேண்டுமென அனைத்து வட்டார வளர்ச்சி அலுவலர்களுக்கும் ஆட்சியர் சுப்புலட்சுமி உத்தரவிட்டுள்ளார்.
News October 31, 2025
வேலூருக்கு வருகை தந்த துணை முதல்வர்

தமிழ்நாடு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவுக்கான முன்னேற்பாடு பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் இன்று (அக்.31) வேலூர் கோட்டை மைதானத்தில் ஆய்வு செய்தார். ஆய்வில் சட்டமன்ற உறுப்பினர்கள் ஏ.பி. நந்தகுமார், கார்த்திகேயன், மாநகராட்சி மேயர் சுஜாதா ஆனந்தகுமார், மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவர் பாபு மற்றும் பலர் உடன் இருந்தனர்.


