News July 5, 2025
வேலூரில் இன்னைக்கு எங்கு எல்லாம் மின்தடை?

வேலூர் 110/11 KV துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பனியின் காரணமாக இன்று (ஜூலை 5) சில இடங்களில் மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, வெம்பி, தோணிமேடு, செங்கனவரம், மாம்பாக்கம், மேற்பாடி, மிட்டூர், வள்ளிமலை, திருவலம், கீழ்மின்னல், அரப்பாக்கம், பெருமுகை, சேவூர், மற்றும் கரணம்புத்தூர் ஆகிய பகுதிகளில் இன்று காலை 9 மணி முதல் மாலை 5மணி வரை மின்தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News July 5, 2025
தொழிலாளர்களுக்கு ரூ.3,000 பென்ஷன் (1/2)

அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு நலத்திட்டங்களை வழங்க மத்திய அரசு இ-ஷ்ரம் கார்டு வழங்கி வருகிறது. இதன் மூலம் மாதம் ரூ.3,000 பென்சன்/ ரூ.2 லட்சம் வரை விபத்து காப்பீடு பெற முடியும். <
News July 5, 2025
இ-ஷ்ரம் கார்டு மூலம் யாரெல்லாம் பயனடையலாம் (2/2)

கட்டுமான தொழிலார்கள், விவசாயக்கூலிகள், வீட்டு வேலை செய்வோர், சலவை தொழிலாளர், எலக்ட்ரிஷியன், ஓலா, ஊபர், ஸ்விக்கி, சோமட்டோ ஊழியர்கள் போன்ற தினக்கூலி பெறும் தொழிலாளர்கள் போன்று ESIC or EPFO போன்ற திட்டங்களில் கீழ் வராத தொழிலார்கள் அனைவரும் அமைப்பு சாரா தொழிலார்களாக கருதப்படுவர். இவர்கள் அனைவரும் இ-ஷ்ரம் கார்டு மூலம் மத்திய அரசு திட்டங்களை பெற முடியும். உங்களுக்கு தெரிந்த தொழிலாளர்களுக்கு பகிரவும்.
News July 5, 2025
வேலூர் உதவித்தொகை பெற கலெக்டர் தகவல்

வேலூர் மாவட்டத்தில் கல்வி பயிலும் மாற்றுத்திறனாளி மாணவ / மாணவியர்களுக்கு 2025-2026 நிதியாண்டிற்கான கல்வி உதவித்தொகை மற்றும் வாசிப்பாளர் உதவித்தொகை பெற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பங்களை இ-சேவை மையம் வழியாக விண்ணப்பிக்க வேண்டும். வாசிப்பாளர் உதவித்தொகை பெற மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் சுப்புலட்சுமி தெரிவித்துள்ளார்.