News March 30, 2024

வேலூரில் அதிமுகவுக்கு வாக்கு சேகரிப்பு

image

நடக்கவிருக்கும் மக்களவைத் தேர்தலில் இந்திய குடியரசு கட்சி தலைவர் செ.கு.தமிழரசன் அதிமுக கூட்டணிக்கு ஆதரவை தெரிவித்த நிலையில், நேற்று மாலை இந்திய குடியரசு கட்சியின் மாவட்ட செயலாளர் தலித் குமாருக்கு அதிமுக நகர செயலாளர் ஜே.கே.என்.பழனி சால்வை அணிவித்து வேலூர் மாவட்ட வேட்பாளரை ஆதரிக்கும் வேண்டினர்.  கட்சியின் நிர்வாகிகளும் தொண்டர்கள் உடன் இருந்தனர். தொடர்ந்து வாக்கு சேகரித்தனர்.

Similar News

News February 12, 2026

வேலூர்: ரூ.520-ல் ரூ.10 லட்சம் காப்பீடு..!

image

இந்திய அஞ்சல் துறையின் கீழ் செயல்படும் ‘இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி’ ஆண்டிற்கு வெறும் ரூ.520, ரூ.555, ரூ.755 பீரீமியத்தில், ரூ.5 லட்சம், ரூ.10 லட்சம், ரூ.15 லட்சம் மதிப்புள்ள விபத்துக் காப்பீட்டு திட்டத்தை வழங்குகிறது. 18 வயது முதல் 65 வயது உள்ளவர்கள் இந்தக் காப்பீட்டுத் திட்டத்தில் சேரலாம். இதனை பெற உடனே உங்கள் அருகிலுள்ள தபால் நிலையத்தை அணுகுங்கள். ஷேர் பண்ணுங்க.

News February 12, 2026

ரயில்வே தேர்வுக்கு கட்டணமில்லா பயிற்சி வகுப்பு

image

ரயில்வே தேர்வு வாரியத்தால் நடத்தப்படும் தேர்வுக்கு தயாராகும் இளைஞர்களுக்கு வேலூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழிற்நெறி வழி காட்டும் மையத்தில் சிறந்த பயிற்றுநர்களை கொண்டு கட்டணமில்லா சிறப்பு பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. இங்கு மாநில அளவிலான மாதிரி தேர்வுகளும் நடத்தப்படுகிறது. எனவே இளைஞர்கள் பங்கேற்று பயனடையுமாறு கலெக்டர் சுப்புலட்சுமி தெரிவித்துள்ளார்.

News February 12, 2026

வேலூர் ஆட்சியர் முக்கிய அறிவிப்பு!

image

வேலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து தாலுகாவிலும் பொது விநியோக திட்டத்தின் சார்பில் ரேஷன் கார்டுகளில் பெயர் நீக்கம், சேர்த்தல், திருத்தம் மேற்கொள்ள சிறப்பு குறைதீர்வு முகாம் வரும் பிப்ரவரி 14-ம் தேதி நடைபெற உள்ளது. காலை 10 மணியளவில் நடைபெற உள்ள இம்முகாமில் பொதுமக்கள் கலந்து கொண்டு பயனடையுமாறு மாவட்ட ஆட்சியர் சுப்புலட்சுமி தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!