News January 23, 2026
வேலூரில் அடையாளம் தெரியாத ஆண் பிணம்!

சத்துவாச்சாரி அடுத்த காந்திநகர் பகுதியில் உள்ள தேசிய நெடுஞ்சாலை சுரங்கப்பாதையில் 35 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் இறந்து கிடந்தார். இதைப்பார்த்த அப்பகுதி பொதுமக்கள் சத்துவாச்சாரி காவல் துறைக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து உடலை கைப்பற்றி அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இறந்தவர் யார்? என்று வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Similar News
News January 24, 2026
BREAKING: வேலூரில் உஷாரான திமுக!

வேலூர் மாவட்டம், குடியாத்தத்தில் ரூ.40 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள அரசு மருத்துவமனையை திறக்க வலியுறுத்தி ஜன.27-ஆம் தேதி அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் போராட்டம் அறிவித்த நிலையில், ஜன.26-ஆம் தேதி பிற்பகல் 3 மணி அளவில் மருத்துவமனை திறப்பு விழா நடைபெறும் என வேலூர் தெற்கு மாவட்ட திமுக மாவட்டச் செயலாளர் ஏ.பி நந்தகுமார் அதிரடியாக அறிவித்தார்.
News January 24, 2026
வேலூர்: ரூ.5 லட்சம் மருத்துவக் காப்பீடு பெறுவது எப்படி?

வேலூர் மக்களே, மத்திய அரசின் ஆயுஷ்மான் பாரத் (PMJAY) திட்டத்தின் கீழ் ரூ.5 லட்சம் வரை நாடு முழுவதும் இலவச சிகிச்சை பெறலாம். 1) விண்ணப்பிக்க அருகில் உள்ள இ-சேவை மையத்தை அணுகலாம். 2) அல்லது <
News January 24, 2026
BREAKING: வேலூரில் இருவர் துடிதுடித்து பலி!

பேர்ணாம்பட்டு பக்காலப்பல்லி பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் தோல் தொழிற்சாலையில் விஷ வாயு கசிந்து பணியில் இருந்த ஷேக் அலி (58), ஜமால் பாஷா (41) இருவரும் மயங்கி விழ்ந்துள்ளனர். இதையடுத்து அவர்களை மீட்டு ஆம்பூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் இருவரும் சிகிச்சை பலனின்றி இருவரும் உயிரிழந்தனர். இதுகுறித்து பேரணாம்பட்டு போலீசார் விசாரித்து வருகின்றனர்.


