News December 12, 2024
வேலூரிலிருந்து 80 சிறப்பு பேருந்துகள் இயக்கம்

திருவண்ணாமலை தீப திருவிழா முன்னிட்டு வேலூர் போக்குவரத்து மண்டலம் சார்பில் இன்று (டிசம்பர் 12) மாலை முதல் திருவண்ணாமலைக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன. அதன்படி வேலூரில் இருந்து 80 சிறப்பு பஸ்களும், திருப்பத்தூரில் இருந்து 40 பஸ்களும், ஆற்காட்டில் இருந்து 30 பஸ்களும் என மொத்தம் 150 சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன. தேவைக்கு ஏற்ப கூடுதலாக பஸ்கள் இயக்கப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
Similar News
News August 9, 2025
வேலூர் மாவட்டத்தில் இன்று உங்களுடன் ஸ்டாலின் முகாம்

வேலூர் மாவட்டத்தில் இன்று (ஆக.09) குடியாத்தம் நகராட்சிக்கு உட்பட்ட நடு பேட்டை அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி, காட்பாடி ஊராட்சி ஒன்றியம் டி.கே புரம் டான் பாஸ்கோ பள்ளி, அணைக்கட்டு ஊராட்சி ஒன்றியம் சேர்பாடி அரசு மேல்நிலைப் பள்ளி ஆகிய இடங்களில் உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெற உள்ளது. தேவை உள்ளவர்கள் நேரில் சென்று மனுக்களை அளிக்கலாம்.
News August 9, 2025
வேலூர் ரேஷன் கார்டு திருத்த சிறப்பு முகாம் கலெக்டர் தகவல்

வேலூர் மாவட்டத்தில் ரேஷன் கார்டு திருத்த சிறப்பு முகாம் நாளை ஆகஸ்ட் 9-ம் தேதி நடைபெற உள்ளது. அதன் விவரம் .
1.வேலூர்- மேல் வல்லம் கிராமம்
2.அணைக்கட்டு- கீழாச்சூர், வெப்பந்தல்
3.காட்பாடி- உள்ளி புத்தூர்
4.குடியாத்தம்- ராமாலை, காந்தி கணவாய்
5.கே.வி.குப்பம்-காலாம்பட்டு
6.பேரணாம்பட்டு- பரவக்கல்
எனவே பொதுமக்கள் இந்த முகாமை பயன்படுத்தி கொள்ளுமாறு கலெக்டர் சுப்புலட்சுமி தெரிவித்துள்ளார்.
News August 9, 2025
வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எச்சரிக்கை

வேலூர் மாவட்டம் முழுவதும் இன்று (ஆகஸ்ட்-8) காவல் ஆய்வாளர்களின் தலைமையிலான போலீசார் நடத்திய சோதனையில், 45 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டு 2 பேர் மீது மதுவிலக்கு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், இது போன்ற குற்ற செயல்களில் ஈடுபடுவோர் மீது, கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மயில்வாகனன் எச்சரித்துள்ளார்.