News December 14, 2025

வேலுார் வீரருக்கு ரூ.1.60 கோடி இழப்பீடு!

image

தேசிய சட்ட பணிகள் ஆணை குழு & வேலுார் மாவட்ட சட்ட பணிகள் ஆணைக்குழு சார்பில், நேற்று லோக் அதாலத் நீதிமன்றம் நடைபெற்றது. இதில் வேலுார், மூஞ்சுர்ப்பட்டை சேர்ந்த எல்லை பாதுகாப்பு படை வீரர் கருணாகரன் (55) என்பவர், சாலை விபத்தில் மாற்றுத்திறனாளி ஆனார். அவரது குடும்பத்தினருக்கு, 1 கோடியே 60 லட்சம் ரூபாயை யுனைடெட் இந்தியா இன்ஷூரன்ஸ் நிறுவனம் இழப்பீடாக வழங்க நேற்று லோக் அதாலத் கோர்ட் உத்தரவிட்டது.

Similar News

News March 2, 2026

வேலூர் கலெக்டர் தலைமையில் மக்கள் குறை தீர்வு கூட்டம்

image

வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற மக்கள் குறைதீர்வு நாள் கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் சுப்புலெட்சுமி பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்று சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் வழங்கி நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் சிவசுப்பிரமணியன், மாவட்ட ஆதிதிராவிடர் நலத்துறை அலுவலர் மதுசெழியன் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

News March 2, 2026

வேலூர்: வீடு கட்ட அரசு தரும் SUPER OFFER!

image

சொந்த வீடு கனவை நிறைவேற்ற மத்திய அரசு பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா 2.0 திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இதில் மானியத்துடன் கடன் வழங்கப்படும். சொந்த வீடு இல்லாத, ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்திற்குள் இருப்பவர்கள் <>pmay-urban.gov.in <<>>என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம். ரேஷன் கார்டு, வங்கி கணக்கு போன்ற ஆவணங்களை இதனுடன் சமர்பிக்க வேண்டும். பிறரும் பயன்பெற SHARE பண்ணுங்க!

News March 2, 2026

வேலூரில் தவெக செயல்வீரர்கள் கூட்டம்!

image

தமிழக வெற்றிக் கழகத்தின் வேலூர் தொகுதி செயல் வீரர்கள் கூட்டம் நேற்று நடந்தது. இந்த கூட்டத்திற்கு மாவட்ட செயலாளர் வேல்முருகன் தலைமை தாங்கினார். இதில் சிறப்பு அழைப்பாளராக கட்சியின் வேலூர், திருப்பத்தூர் மாவட்ட தேர்தல் கண்காணிப்பாளர் நெடுஞ்செழியன் கலந்து கொண்டு தேர்தல் பரப்புரைப் பணிகள், வாக்குச் சாவடி முகவர்களின் பணிகள் உள்ளிட்ட செயல்பாடுகள் குறித்து ஆலோசனைகளை வழங்கினார்.

error: Content is protected !!