News December 2, 2025
வேலகவுண்டம்பட்டியில் நேர்ந்த சோகம்!

வேலகவுண்டம்பட்டி அருகே மருக்கலாம்பட்டி, புத்தூர் கிழக்கைச் சேர்ந்த துரைசாமி (68) மனைவி ஜெயா (64) தம்பதியினர் மீன் கடை நடத்தி வந்தனர். கடந்த 30ம் தேதி இரவு வீட்டுக்குப் செல்லும்போது அதிவேக மோட்டார் சைக்கிள் ஜெயா மீது மோதி படுகாயமடைந்தார். அக்கம் பக்கத்தினர் மீட்டு நாமக்கல் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று உயிரிழந்தார். மேலும் வேலகவுண்டம்பட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Similar News
News December 4, 2025
நாமக்கல் சோப்புக்கல் பாத்திரங்களுக்கு புவிசார் குறியீடு

தமிழ்நாட்டில் இந்த ஆண்டில் ஐந்து பொருட்களுக்கு மத்திய அரசு புவிசார் குறியீடு வழங்கியுள்ளது. அதில் நாமக்கல் சோப்புக்கல் சமையல் பாத்திரங்களுக்கு புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ளது. சோப்புக்கல் பாத்திரங்கள் வலிமையாகவும், நீடித்த உழைப்புடனும் இருப்பதால், குறைந்தபட்ச பராமரிப்புடன் கூட பல ஆண்டுகள் உடையாமல் இருக்கும். தமிழ்நாட்டில் மொத்தம் 74 புவிசார் குறியீடு பெற்ற பொருட்கள் உள்ளன.
News December 4, 2025
நாமக்கல்: லஞ்சம் கேட்டாங்களா? உடனே பண்ணுங்க!

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள அரசு அலுவலகங்களில் லஞ்சம் கேட்கும் அதிகாரிகள் குறித்து பொதுமக்கள் எந்தவித தயக்கமும் இன்றி புகார் அளிக்கலாம். லஞ்சம் தொடர்பான புகார்களை dspnmkdvac.tnpol@nic.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு விரிவாக எழுதி அனுப்பலாம். அல்லது 04286- 281331 என்ற எண்ணுக்கு தொடர்பு கொண்டு உங்கள் புகாரைப் பதிவு செய்யலாம். ஊழலற்ற நிர்வாகத்தை உறுதி செய்ய அனைவருக்கும் இதை ஷேர் பண்ணுங்க!
News December 4, 2025
நாமக்கல்: ரேஷன் கடையில் கைரேகை வேலை செய்யலையா?

ரேஷன் கடையில் கைரேகை சரியாக வேலை செய்யாததால் நமக்கு பின்னால் வந்தவர்கள் நமக்கு முன்னால் பொருட்கள் வாங்கி செல்வர். இந்த சிக்கலை தீர்க்க இங்கு<


