News December 12, 2024

வேப்பூர் சுற்றுவட்டார பகுதி மக்களுக்கு முக்கிய அறிவிப்பு

image

கல்வராயன் மலைத் தொடர்ச்சியில் பெய்து வரும் கனமழை காரணமாக கோமுகி அணைக்கு நீர் வரத்து அதிகரித்து உள்ளதால், கோமுகி அணையிலிருந்து 2000 கன அடி உபரி நீர் ஆற்றின் மிகை போக்கி மற்றும் அணையின் பிரதான ஷட்டர் வழியாக வெளியேற்றப்பட்டு வருகிறது. எனவே கடலூர் மாவட்டம், வேப்பூர் வட்டத்திற்குட்பட்ட கொத்தனூர் சுற்று வட்டாரத்தைச் சேர்ந்த பொதுமக்கள் ஆற்றில் இறங்கவோ, குளிக்கவோ கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Similar News

News November 12, 2025

கடலூர்: வாக்காளர் பெயர் சேர்க்க முக்கிய அறிவிப்பு

image

கடலூர் மக்களே, உங்கள் பகுதியில் SIR படிவம் வழங்கும் போது நீங்கள் வீட்டில் இல்லையா? இதனால் உங்கள் ஓட்டுரிமை பறிபோய்விடும் என்ற கவலை உள்ளதா? கவலை வேண்டாம். <>இங்கே கிளிக் <<>>செய்து, FILL ENUMERATION FORM என்ற ஆப்ஷனை தேர்ந்தெடுத்து உங்கள் வாக்காளர் அடையாள அட்டை எண் அல்லது பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணை உள்ளிட்டு உங்களால் ஆன்லைன் மூலமாக வாக்காளர் பட்டியலில் பதிவு செய்து கொள்ள முடியும்! ஷேர் பண்ணுங்க!

News November 12, 2025

கடலூர்: தவறி விழுந்து பேருந்து ஓட்டுநர் பலி

image

சங்கிலி குப்பத்தைச் சேர்ந்தவர் மணிகண்டன் (40). தனியார் பேருந்து ஓட்டுநராக பணிபுரிந்து வந்த இவர், நேற்று இரவு ராமாபுரம் பைபாஸ் சாலை வழியாக டூவீலரில் சென்று கொண்டிருந்தார். அப்போது நிலை தடுமாறி கீழே விழுந்ததில் மணிகண்டன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதையடுத்து மணிகண்டன் உடலை கைப்பற்றிய முதுநகர் போலீசார் பிரேத பரிசோதனைக்காக உடலை அனுப்பி வைத்து, வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

News November 12, 2025

கடலூர்: பட்டப் பகலில் கொள்ளை

image

திருப்பாதிரிப்புலியூர் தண்டபாணி செட்டி தெருவில் பூக்கடை செந்தில் என்பவர் வசித்து வருகிறார். இவர் இல்லத்தில் மர்ம நபர் ஒருவர் பட்டப் பகலில் வீட்டு லாக்கர் உடைத்து வெள்ளி மற்றும் தங்க நகைகள் பித்தளை பாத்திரங்கள் மற்றும் வெள்ளி விளக்கு போன்ற பொருட்கள் திருடி சென்றுள்ளார். இச்சம்பவம் குறித்து திருப்பாதிரிப்புலியூர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

error: Content is protected !!