News July 17, 2024
வேன் மோதி 5 பேர் உயிரிழப்பு

திருச்சி சமயபுரம் கோயிலுக்கு நடந்து சென்ற பக்தர்கள் மீது வேன் மோதியதில் 4 பெண்கள் உட்பட 5 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். புதுக்கோட்டை, கன்னுக்குடிப்பட்டியைச் சேர்ந்த பக்தர்கள் சமயபுரம் கோயிலுக்கு நடந்து சென்று கொண்டிருந்தபோது இன்று வளம்பகுடி பகுதியில் விபத்து நடைபெற்றது. இது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
Similar News
News August 16, 2025
திருச்சி: பணம் அச்சடிக்கும் நிறுவனத்தில் வேலை!

ரிசர்வ் வங்கியின் கீழ் இயங்கும் பணம் அச்சடிக்கும் தொழிற்சாலையான (BRBNMPL) நிறுவனத்தில் காலி பணியிடங்கள் நிரப்படவுள்ளது. கல்வி தகுதி Deputy Manager பதவிக்கு B.E , B.Tech மற்றும் Process Assistant Grade-I பதவிக்கு ITI , Diploma முடித்திருக்க வேண்டும். Rs.24,500/- சம்பளம் முதல் Rs.88,638 வரை வழங்கப்படும். நேர்முக தேர்வுக்கு செல்ல விரும்பினால் <
News August 16, 2025
திருச்சி: இலவச வீடியோ ஒளிப்பதிவு பயிற்சி வேண்டுமா?

தமிழ்நாடு (தாட்கோ) அமைப்பு மூலம் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு, வீடியோ ஒளிப்பதிவு மற்றும் வடிவமைப்பு பயிற்சி வழங்கப்படவுள்ளது. வயது வரம்பு 18-30 இருக்க வேண்டும். கல்வித்தகுதி பன்னிரெண்டாம் தேர்ச்சி பெற வேண்டும். பயிற்சி சான்றிதழ் மற்றும் வேலை வாய்ப்பிற்கு வழிவகை செய்யப்படும். இப்பயிற்சினை பெற இங்கே <
News August 16, 2025
திருச்சி ரயில்வே கோட்டத்தில் வருவாய் அதிகரிப்பு

திருச்சி ரயில்வே கோட்டத்தில் வருவாய் அதிகரித்துள்ளதாக டி.ஆர்.எம் பாலக்ராம் நேகி தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “திருச்சி ரயில்வே கோட்டத்தில் இந்த ஆண்டு ஏப்ரல்-1 முதல், ஜூலை-31 வரை பயணிகள் பயணம் செய்த வகையில் ரூ.187.46 கோடியும், சரக்கு அனுப்பிய வகையில் ரூ.318.94 கோடியும் வருவாய் கிடைத்துள்ளது. இது கடந்த நிதியாண்டை விட அதிகம்” என தெரிவித்துள்ளார்.