News January 7, 2026

வேதனையின் உச்சத்தில் வேடசந்துார் விவசாயிகள்!

image

வேடசந்துார்: நரசிங்கபுரம் அருகே கட்டப்பட்டுள்ள தடுப்பணையால், ஆத்தூர் காமராஜர் நீர்த்தேக்கம் மற்றும் குடகனாறு அணைக்கு வர வேண்டிய தண்ணீர் திசைமாறிச் செல்கிறது. இதனால் கடந்த 10 ஆண்டுகளாகப் பாதிப்படைந்துள்ள விவசாயிகள், நீரை மீட்டெடுக்கப் போராடி வருகின்றனர். இது தொடர்பாக 2020-ல் அமைக்கப்பட்ட வல்லுநர் குழுவின் அறிக்கை இன்னும் வெளியாகாததால் வேதனை. தமிழக முதல்வர் இதில் தலையிட்டுத் தீர்வு காண வேண்டும்

Similar News

News January 8, 2026

திண்டுக்கல்: ரூ.5 லட்சம் மருத்துவக் காப்பீடு பெறுவது எப்படி?

image

மக்களே மத்திய அரசின் ஆயுஷ்மான் பாரத் (PMJAY) திட்டத்தின் கீழ் ரூ. 5 லட்சம் வரை நாடு முழுவதும்இலவச சிகிச்சை பெறலாம்

1. விண்ணப்பிக்க்க அருகில் உள்ள இ-சேவை மையத்தை அணுகலாம்

2.அல்லது pmjay.gov.in இணையதளத்தில் ரேஷன்&ஆதார் கார்டு
உள்ளிட்ட ஆவணங்களுடன் விண்ணப்பிக்கலாம்

3.விண்ணப்பித்த 10 – 15 நாட்களில் அதிகாரிகள் சரிபார்ப்பிற்குப் பின் ‘கோல்டன் கார்டு’ வழங்கப்படும். அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க

News January 8, 2026

திண்டுக்கல்: SBI வங்கியில் ரூ.51,000 சம்பளத்தில் வேலை!

image

திண்டுக்கல் மக்களே, SBI வங்கியில் காலியாக உள்ள Customer Relationship Executive 284 பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகின. இப்பணிக்கான விண்ணப்ப தேதி ஜன.10-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. 20-35 வயதுட்பட்ட ஏதாவது ஒரு டிகிரி முடித்தவர்கள்<> இங்கு க்ளிக் <<>>செய்து விண்ணப்பிக்கவும். சம்பளம் ரூ.51,000 வழங்கப்படும். இதற்கு தேர்வு கிடையாது. இந்த நல்ல தகவலை அனைவருக்கும் SHARE செய்யுங்க!

News January 8, 2026

வடமதுரை அருகே வசமாக சிக்கிய இளைஞர்கள்!

image

திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை அருகே உள்ள வேல்வார்கோட்டை பகுதியைச் சேர்ந்தவர் சுப்பையா (70). இவர் தனது வீட்டின் முன்பு கட்டி வைத்திருந்த ஆட்டை, திருடிச் சென்றனர். இதனையடுத்து ஆடு திருட்டில் ஈடுபட்ட திண்டுக்கல் RVS நகரைச் சேர்ந்த வினோத் (28) மற்றும் பிள்ளையார்பாளையத்தைச் சேர்ந்த அஸ்கர் மீரான் (21) ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்து
ஆட்டை மீட்டனர்.

error: Content is protected !!