News April 8, 2025
வேண்டுடியதை நிறைவேற்றும் நெல்லுக்கடை மாரியம்மன்

நாகையில் உள்ள வழிபாட்டு தலங்களில் மிகவும் பிரசித்தி பெற்றது இந்த நெல்லுக்கடை மாரியம்மன் ஆலயம். இந்த அம்மனுக்கு வருடத்திற்கு ஒருமுறை தைலக்காப்பு செலுத்துவதே இக்கோயிலின் சிறப்பாகும். இக்கோயிலில் விதை நெல்லை வைத்து வழிபடுகின்றனர். இங்குள்ள அம்மனை வேண்டினால் கேட்டது கிடைக்கும், நித்தம் வாழ்வில் துணை வருவார் என்பது இப்பகுதி மக்களின் நம்பிக்கை.
Similar News
News April 17, 2025
மீனவர்கள் மீது கடற்கொள்ளையர்கள் தாக்குதல்

கோடியக்கரை அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர். மயிலாடுதுறை மீனவர்கள் கோடியக்கரை அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த பொழுது அங்கு வந்த இலங்கை கடற்கொள்ளையர்கள் ஆயுதங்களால் தாக்கி செல்போன், 50 கிலோ மீன், ஜிபிஸ் கருவி ஆகியவற்றை பறித்து சென்றதாக மீனவர்கள் புகார். மேலும் தாக்குதலில் 4 மீனவர்கள் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
News April 17, 2025
ரூ. 8 கோடி மதிப்புள்ள போதைப்பொருள் பறிமுதல்

நாகையை சேர்ந்தவர் அலெக்ஸ், இவர் மீது, ஏற்கனவே போதைப்பொருள் கடத்தல் வழக்குகள் நிலுவையில் உள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் நாகையில் இருந்து புதுக்கோட்டை வந்த அலெக்ஸை போதை பொருள் தடுப்பு பிரிவு போலீசார் கைது செய்தனர். அவரிடமிருந்து 95 கிராம் மெத்த பெட்டமைன் என்ற போதை பொருள் மற்றும் ரூ.2 லட்சம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். அப்போதை பொருளின் மதிப்பு ரூ.8 கோடி என்று கண்டறியப்பட்டுள்ளது
News April 16, 2025
பொதுமக்களிடமிருந்து 19 மனுக்களைப் பெற்ற எஸ்.பி

நாகை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் ஏ.கே. அருண்கபிலன் எஸ்.பி. பொதுமக்களை சந்தித்து அவர்ளின் குறைகளை கேட்டறிந்து 19 மனுக்களைப் பெற்றார். பெறப்பட்ட மனுக்களுக்கு விரைவில் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் உறுதியளித்தார்கள். ஒவ்வொரு வாரம் புதன்கிழமை தோறும் மக்கள் குறை தீர்க்கும் மனு நாள் நாகப்பட்டினம் மாவட்ட காவல் அலுவலகத்தில் நடைபெறும் என்று தெரிவித்துள்ளார்.