News April 6, 2025
வேண்டியதை நிறைவேற்றும் இசக்கியம்மன் திருக்கோயில்

கன்னியாகுமரி, முப்பந்தலில் அமைந்துள்ளது அருள்மிகு இசக்கியம்மன் திருக்கோவில். நினைத்ததை வேண்டி பித்தளை, வெண்கலம் , வெள்ளி போன்ற உலோகங்களால் ஆனா உடல் உருவத்தை நேர்த்திக்கடனாக செய்தால் வேண்டியது நடக்கும் என்பது ஐதீகம். தமிழ் மாதத்தின் கடைசி செவ்வாய் இங்கு சிறப்பு வாய்ந்த நாள் ஆகும். இங்கு வேண்டினால் குழந்தை பிரச்சனை, நீண்ட நாள் உடல் பிரச்சனை அனைத்தும் நீங்கும் என்பது நம்பிக்கை. ஷேர் பண்ணுங்கள்
Similar News
News April 12, 2025
தெப்பக்குளத்தில் மூழ்கி தவில் வித்வான் உயிரிழப்பு

பூதப்பாண்டி தெற்கு தெருவை சேர்ந்தவர் சுபாஷ் (42). தவில் வித்வானான இவருக்கு திருமணம் ஆகவில்லை. பெற்றோர் ஏற்கனவே இறந்துவிட்ட நிலையில் தனியாக வசித்து வந்த இவர் நேற்று மாலை பூதப்பாண்டி பூதலிங்க சுவாமி கோவிலுக்கு சென்றுள்ளார். அப்போது தெப்பக்குளத்தில் இறங்கிய போது தண்ணீரில் மூழ்கி அவர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. இது குறித்து பூதப்பாண்டி போலீசார் நேற்று வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
News April 11, 2025
ரேஷன் கார்டில் திருத்தம் செய்யணுமா?

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து வட்ட வழங்கல் அலுவலகங்களில் ரேஷன் அட்டை திருத்த முகாம் நாளை (ஏப்.12) காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை நடைபெறவுள்ளது. ரேஷன் கார்டில் பெயர் நீக்கம், திருத்தம், சேர்த்தல், முகவரி மாற்றம், மொபைல் நம்பர் அப்டேட் போன்ற அப்டேட்களைச் இலவசமாக செய்து கொள்ளலாம். ரேஷன் கார்ட் வைத்திருக்கும் உங்களது நண்பர்களுக்கு SHARE செய்து உதவவும்.
News April 11, 2025
மாவட்ட ஆட்சியர் தலைமையில் உறுதிமொழி ஏற்பு

அம்பேத்கர் பிறந்த நாளை நினைவு கூறும் வகையில் முன்னதாக கன்னியாகுமரி மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் இன்று ஆட்சித்தலைவர் அழகுமீனா தலைமையில் அரசு அலுவலர்கள், பணியாளர்கள் உட்பட அனைவரும் சமத்துவ நாள் உறுதிமொழியினை ஏற்றுக் கொண்டனர். மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஏராளமான அரசு அலுவலர்கள் கலந்து கொண்டு உறுதிமொழி ஏற்றனர்.