News January 16, 2026
வேண்டியதை அருளும் சேலம் கோட்டை மாரியம்மன்!

சேலம் பழைய பேருந்து நிலையம் அருகே வீற்றிருக்கும் கோட்டை மாரியம்மன், நகரின் எட்டு மாரியம்மன்களில் மிகவும் பெரியவளாகவும், சக்தி வாய்ந்தவளாகவும் போற்றப்படுகிறாள். இங்கு வந்து அம்மனை வேண்டினால் அம்மை நோய், உடல் குறைபாடுகள் நீங்குவதோடு, குழந்தை வரம் மற்றும் தீராத நோய்களும் குணமாகும் என்பது பக்தர்களின் ஆழமான நம்பிக்கை. இந்த ஆன்மீகத் தகவலை மற்ற பக்தர்களுக்கும் ஷேர் பண்ணுங்க!
Similar News
News January 27, 2026
சேலத்தில் நாளை இங்கெல்லாம் மின்தடை!

ஜோடுகுளி, எலத்தூர், தீவட்டிப்பட்டி, மூக்கணுார், ஆலச்சம்பாளையம், மலங்காடு, வெள்ளாண்டிவலசு ஒரு பகுதி, பழைய எடப்பாடி, மெய்யம்பாளையம், மணியகாரம் பாளையம், வேம்பனேரி, திருமாலுார், காவேரிப்பட்டி,பெரமச்சிபாளையம், தலைவாசல் கால்நடை பம்ப், பைப்பூர், ஆரூர்ப்பட்டி,சேடப்பட்டி,மேட்டுமாரனுார், நாகி ரெட்டியூர், முனியம்பட்டி உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் நாளை (ஜன.28) காலை 5 மணி முதல் 9 வரை மின் தடை!
News January 27, 2026
சேலத்தில் 78 கடைகள் மீது அதிரடி வழக்கு!

குடியரசு தினத்தன்று பணியாளர்களுக்கு விடுமுறை அளிக்காத சேலம், ஆத்தூர் மற்றும் மேட்டூர் பகுதிகளில் உள்ள 24 கடைகள், 52 உணவகங்கள் மற்றும் 2 மோட்டார் நிறுவனங்கள் என மொத்தம் 78 நிறுவனங்கள் மீது தொழிலாளர் துறை வழக்குப்பதிவு செய்துள்ளது. இனிவரும் காலங்களில் விதிமுறைகளை மீறும் நிறுவனங்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
News January 27, 2026
சேலம்: ரூ.5 லட்சம் வரை இலவச சிகிச்சை !APPLY NOW

சேலம் மக்களே முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் ஆண்டுக்கு ரூ.5 லட்சம் வரை சிகிச்சை பெற வழிவகை செய்யப்பட்டுள்ளது. இத்திட்டத்தில் இணைய விரும்புவோர் குடும்ப அட்டை, ஆதார் மற்றும் வருமானச் சான்றிதழுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலுள்ள மையத்தில் பதிவு செய்து அடையாள அட்டை பெற்றுக்கொள்ளலாம். கூடுதல் தகவல்களுக்கு 1800 425 3993 என்ற எண்ணைத் தொடர்பு கொள்ளலாம்.


