News March 25, 2024
வேட்புமனு தாக்கல் செய்த தமிழச்சி தங்க பாண்டியன்

நாடாளுமன்ற பொதுத் தேர்தலில் இந்தியா கூட்டணி சார்பில் சென்னை தெற்கு மக்களவைத் தொகுதியில் திமுக வேட்பாளர் தமிழச்சி தங்கபாண்டியன் போட்டியிட உள்ளார். இந்நிலையில் இன்று அவர் அடையாறு – பெருநகர சென்னை மாநகராட்சி தெற்கு வட்டாரத் துணை ஆணையர் அலுவலகத்தில் திமுக வேட்பாளராக போட்டியிடுவதற்கு மனு தாக்கல் செய்தார். உடன் இந்தியா கூட்டணி கட்சிகளின் நிர்வாகிகள் உடனிருந்தனர்.
Similar News
News April 15, 2025
தொழில் பிரச்னைகளை தீர்க்கும் நிமிஷாம்பாள்

சென்னை சௌகார்பேட்டை காசி செட்டி தெருவில், பலருக்கும் தெரியாத அன்னை நிமிஷாம்பாள் கோவில் அமைந்துள்ளது. தமிழகத்தில் நிமிஷாம்பாளுக்கு இங்கு மட்டும் தான் கோவில் உள்ளது. இங்கு சென்று வழிப்பட்டால் தொழில் சார்ந்த பிரச்னைகள் நீங்கி, நஷ்டத்திலிருந்து மீண்டு வியாபாரம் லாபகரமாகும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. தொழில், வியாபாரத்தில் சிரமப்படும் உங்கள் நண்பர்கள், உறவினர்களுக்கு ஷேர் செய்யுங்கள்.
News April 15, 2025
பைக் விபத்து: சிறுவன் கூர்நோக்கு இல்லத்தில் அடைப்பு

சென்னை சாலிகிராமத்தில் கடந்த 11ஆம் தேதி அதிவேகமாக பைக் ஓட்டி விபத்தை ஏற்படுத்திய 16 வயது சிறுவன், சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள கூர்நோக்கு இல்லத்தில் அடைக்கப்பட்டார். இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட சிறுவனின் தாயார் ஜாமினில் விடுவிப்பு. விபத்தில் படுகாயம் அடைந்த 76 வயது முதியவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் நிலையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
News April 15, 2025
மெட்ராஸ் ஐகோர்டில் வேலை; டிகிரி இருந்தால் போதும்

சென்னை உயர் நீதிமன்றத்தில் தனி உதவியாளர், எழுத்தர் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. மொத்தம் 47 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதற்கு இளநிலை பட்டபடிப்பு முடித்திருக்க வேண்டும். மாதம் ரூ.20,600 முதல் ரூ. 2,05,700 வரை சம்பளம் வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் <