News April 3, 2026

வேட்பாளர்களுக்கு தோள் கொடுப்பேன்: அண்ணாமலை

image

பாஜக வேட்பாளர் பட்டியலில் <<19556550>>அண்ணாமலை<<>> பெயர் இடம்பெறாதது விவாதத்துக்கு உள்ளாகியுள்ள நிலையில், அவரது ட்வீட் கவனம் பெற்றுள்ளது. அதில், ஒரு தொண்டனாக போட்டியிடும் பாஜக & கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு தோள் கொடுத்து வெற்றி பெற வைப்பேன் என்று தெரிவித்துள்ளார். 210 தொகுதிகளில் NDA கூட்டணி வெற்றி என்ற இலக்கை அடைய அனைவருக்காகவும் தீவிர பிரசாரம் செய்வேன் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

Similar News

News April 14, 2026

SHOCK… 331 குழந்தைகளுக்கு HIV தொற்று

image

ஒருமுறை பயன்படுத்திய சிரஞ்சை மீண்டும் மீண்டும் பயன்படுத்தியதால் 331 குழந்தைகள் HIV தொற்றால் பாதிக்கப்பட்ட செய்தி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாகிஸ்தானின் டவுன்ஸாவிலுள்ள THQ ஹாஸ்பிடலில்தான், 2024 நவம்பர் – 2025 அக்டோபர் வரையிலான காலக்கட்டத்தில் தொற்றுகள் பதிவாகியுள்ளன. பாதிக்கப்பட்ட சில குழந்தைகள் உயிரிழந்துள்ளனர். இருப்பினும், இக்குற்றச்சாட்டை ஹாஸ்பிடல் நிர்வாகம் மறுத்துள்ளது.

News April 14, 2026

எதேச்சாதிகார போக்கில் பாஜக அரசு: திருச்சி சிவா

image

நாடாளுமன்ற கூட்டத்தொடரில் நிறைவேற்றப்படவுள்ள தொகுதி மறுவரையறை, மகளிர் இடஒதுக்கீடு மசோதாக்கள் இதுவரை MP-க்களுக்கு அனுப்பப்படவில்லை என திருச்சி சிவா குற்றஞ்சாட்டியுள்ளார். இது பாஜக தலைமையிலான மத்திய அரசின் எதேச்சாதிகார மனப்பான்மையை மீண்டும் ஒருமுறை வெளிப்படுத்துகிறது என்றார். முன்னெப்போதும் இல்லாத வகையில் மசோதா விவரங்களை வழங்காதது MP-க்களை ஒரு குழப்பமான மனநிலையில் ஆழ்த்தியுள்ளதாகவும் சாடினார்.

News April 14, 2026

ஏப்.16-ல் தவெக தேர்தல் அறிக்கை ரிலீஸ்

image

மகளிருக்கு மாதம் ₹2,500, ஆண்டுக்கு 6 சிலிண்டர் இலவசம் என TVK தேர்தல் வாக்குறுதிகளை பகுதி பகுதியாக விஜய் அறிவித்து வருகிறார். இந்நிலையில், தவெகவின் முழு தேர்தல் அறிக்கை ஏப்.16-ல் வெளியிடப்படும் என அவர் கூறினார். இதனிடையே திருப்பூர் பரப்புரையில், அரசுத் துறையில் 5 ஆண்டுகளுக்கு மேல் ஒப்பந்த முறையில் பணியாற்றும் ஆசிரியர்கள், நர்சுகள் பணி நிரந்தரம் செய்யப்படுவர் என அவர் வாக்குறுதி தந்துள்ளார்.

error: Content is protected !!