News October 11, 2024

வேட்டையன் பட இயக்குனர் மீது போலீசில் புகார்

image

ரஜினிகாந்த் நடிப்பில் வெளிவந்த வேட்டையன் படத்தில் கோவில்பட்டி காந்தி நகர் அரசு பள்ளி மாணவர்கள் ஆசிரியை ஒருவரை ஆபாசமாக திட்டுவது போல காட்சி அமைக்கப்பட்டுள்ளது. சிறப்பான பள்ளி என்று விருது பெற்ற அரசு பள்ளியின் பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் காட்சி அமைத்த இயக்குனர் ஞானவேல் மீது நடவடிக்கை எடுப்பதுடன் அந்த காட்சியை படத்திலிருந்து நீக்க சமூக ஆர்வலர்கள் போலீசில் புகார் அளித்துள்ளனர்.

Similar News

News September 13, 2025

மில்லர்புரத்தில் குடிநீர் குழாய் உடைப்பு – மேயர் ஆய்வு

image

தூத்துக்குடி மாநகராட்சிக்கு உட்பட்ட மில்லர்புரம் பகுதியில் குடிநீர் குழாய் செல்லும் பாதையில் உடைப்பு ஏற்பட்டு உள்ளதாகவும், சுந்தரவேல்புரம் பகுதியில் பூங்கா அமைத்து தருமாறும் வந்த மாநகர மக்களின் கோரிக்கையினை தொடர்ந்து அதனை மேயர் ஜெகன் பார்வையிட்டு ஆய்வு செய்தார். உடன் வட்ட கழக செயலாளரும் முன்னாள் மாமன்ற உறுப்பினருமான திரு.ரவீந்திரன் உடனிருந்தார்.

News September 12, 2025

தூத்துக்குடி மக்களே சான்றிதழ்கள் காணவில்லையா?

image

தூத்துக்குடி மக்களே சாதி சான்றிதழ், வருமான சான்றிதழ், பிறப்பு/இறப்பு சான்றிதழ், இருப்பிட சான்றிதழ் உள்ளிட்டவை அவசியாக தேவைக்கப்படும் ஆவணங்களாக உள்ளது. இவை தொலைந்துவிட்டால் நேரடியாக அலுவலகத்துக்கு சென்று அலைய வேண்டாம். வீட்டில் இருந்தபடியே உங்கள் போனில் டவுன்லோடு செய்துக்கொள்ளலாம். <>இந்த லிங்கில்<<>> சென்று உங்கள் சான்றிதழ் எண்ணை பதிவிட்டு டவுன்லோடு பண்ணிக்கோங்க. இதை உங்க நண்பர்களுக்கு *SHARE* பண்ணுங்க.

News September 12, 2025

திருச்செந்தூர் கோவிலை உறுதிமொழி குழுவினர்ஆய்வு

image

தமிழ்நாடு சட்டமன்ற பேரவை அரசு உறுதிமொழிக் குழு தலைவர் மற்றும் பண்ருட்டி சட்டமன்ற உறுப்பினர் வேல்முருகன் தலைமையில் குழு உறுப்பினர்கள்/சட்டமன்ற உறுப்பினர்கள் அருள் (சேலம் மேற்கு), மாங்குடி (காரைக்குடி), எம்.கே.மோகன் (அண்ணா நகர்) ஆகியோர் இன்று 12.9.25 திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் பாடசாலையை பார்வையிட்டு கள ஆய்வு நடத்தினர்.

error: Content is protected !!