News October 8, 2024

வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயத்தில் சீசன் துவக்கம்

image

மதுராந்தகம் அருகே வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம் அமைந்துள்ளது. இங்கு 86 ஏக்கர் பரப்பளவில் ஏரி உள்ளது. சைபீரியா, பாகிஸ்தான், பங்களாதேஷ், பர்மா உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த கூழைகுடா, நத்தை கொத்தி நாரை, பாம்பு தாரா, வக்கா உள்ளிட்ட பறவை இனங்கள், வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயத்திற்கு வலசை வரத் துவங்கியுள்ளன. அக்டோபர் 2ஆவது வாரம் முதல் சீசன் துவங்கும் என வனதுறைஅதிகாரிகள் தெரிவித்தனர்.

Similar News

News December 11, 2025

செங்கல்பட்டு: பாரில் நடந்த தகராற்றில் ஒருவர் கைது!

image

தாம்பரம் சன்டோரியம் அருகே மதுக்கடையில் செய்யுரை சேர்ந்த தினேஷ் மது அருந்திக் கொண்டிருந்தார். அப்போது செம்பியத்தை சேர்ந்த அப்துல் ரகிம் தனது நண்பர்களுடன் வந்து தினேஷ் அருகே அமர்ந்தார். எதிர்பாராத விதமாக, இருவருக்கும் இடையே சண்டை நடந்தது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் நடத்திய விசாரணையில், ரகிம் மீது ஏற்கனவே 3 வழக்குகள் இருப்பது தெரிய வந்தது. போலீசார் அப்துல் ரகிமை கைது செய்தனர்.

News December 11, 2025

செங்கல்பட்டு: ரயில் சேவையில் மாற்றம்!

image

சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் மறுசீரமைப்புப் பணிகள் நடைபெறுவதால், டிச-15 முதல் 2025 பிப்ரவரி 3 வரை சில விரைவு ரயில்களின் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.உழவன், அனந்தபுரி மற்றும் ராமேஸ்வரம் விரைவு ரயில்கள் (வண்டி எண்கள்: 16866/16865, 20636/20635, 16752/16751) எழும்பூருக்குப் பதிலாக தாம்பரம் ரயில் நிலையத்தில் தங்கள் பயணத்தை முடித்துக்கொள்ளும் (வந்தடையும்) மற்றும் அங்கிருந்தே புறப்படும்.

News December 11, 2025

செங்கல்பட்டு: இரவு ரோந்து செல்லும் காவலர்கள் விவரம்

image

செங்கல்பட்டு மாவட்டத்தில் நேற்று (டிசம்பர்- 10) இரவு 10 மணி முதல் இன்று காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!