News October 25, 2024
வேடந்தாங்கலில் பறவைகள் வரத்து தொடங்கியது

வேடந்தாங்கலில் தற்போது சீசன் களைகட்டியுள்ள நிலையில் பறவைகள் காணப்படுகின்றன. கொத்தி நாரை, சாம்பல் நாரை, புள்ளி மூக்கு வாத்து உள்ளிட்ட இரண்டாயிரத்துக்கும் மேல் பறவை இனங்கள் சரணாலயத்தில் வந்துள்ள நிலையில் FTC மூலம் விவசாயிகளுக்கு களப் பயிற்சிகள் அளிக்கவும் சரணாலயத்தை சுற்றிப் பார்க்கவும் ஏற்பாடுகள் செய்ய அரசு அதிகாரிகள் ஆவணங்கள் செய்ய வேண்டும் என்று உத்திரமேரூர் விவசாயிகள் கூறுகின்றனர்.
Similar News
News September 17, 2025
தமிழ்நாட்டின் தலையெழுத்தை மாற்றிய காஞ்சிபுரம்!

காஞ்சிபுரத்தில் 1925ம் ஆண்டு காங்கிரஸ் கட்சியின் தமிழ் மாகாண மாநாடு, காங்கிரஸ் தலைவர் திரு.வி.க தலைமையில் நடைபெற்றது. இந்த மாநாட்டில் தந்தை பெரியார் இடஒதுக்கீட்டிற்கு ஆதரவாக தீர்மானம் கொண்டு வந்தார். இது கட்சியினரால் நிராகரிக்கப்பட்டது. அப்போது பெரியார், “காங்கிரசை ஒழிப்பதே இனி எனது வேலை” என கூறி வெளியேறினார். இதன் பிறகே, தி.க உருவாக்கப்பட்டது. பெரியார் பற்றிய உங்கள் கருத்தை கமெண்டில் சொல்லுங்க.
News September 17, 2025
காஞ்சிபுரத்தில் இன்று கரண்ட் கட்!

காஞ்சிபுரம், நீர்வள்ளூர் துணைமின் நிலையத்தில் இன்று (செப்.,17) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளது. இதனால் நீர்வள்ளூர், சின்னையன் சத்திரம், ராஜகுளம், தொடுர், மேல்மதுரமங்களம், கண்ணன்தாங்கல், குணகரம்பாக்கம், மதுரமங்களம், செல்வழிமங்களம், சின்னிவாக்கம், மருதம், பரந்தூர், சிறுவாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை ஏற்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. (SHARE)
News September 17, 2025
காஞ்சிபுரம்: உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெறும் இடங்கள்!

காஞ்சிபுரத்தில் உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெறும் இடங்கள் அறிவிக்கப்ட்டுள்ளது. அதன்படி, இன்று (செப்.,17)
1.குன்றத்தூர்-சமுதாய கூடம், சேக்கிழார் நகர்
2.ஸ்ரீபெரும்புதூர்-ஊராட்சி அலுவலகம், கிளாய்
3.குன்றத்தூர் நகர்ப்புற பஞ்சாயத்து-TDMNS திருமண மண்டபம்
4.குன்றத்தூர் வட்டாரம்-திருவள்ளுவர் அறிவு களஞ்சிய மண்டபம், பூந்தண்டலம்.
மற்றவர்களுக்கும் ஷேர் செய்து தெரியப்படுத்துங்க.