News April 16, 2024
வேடசந்தூர்: பேருந்து நிலையத்தில் முதியவர் மரணம்

வேடசந்தூர் பேருந்து நிலையத்தில் அடையாளம் தெரியாத முதியவர் மர்மமான முறையில் இறந்து கிடப்பதாக வேடசந்தூர் காவல் நிலையத்திற்கு நேற்று தகவல் கிடைத்தது. சம்பவ இடத்திற்கு சென்ற போலீஸார் மற்றும் கிராம அலுவலர் இறந்தவரின் உடலை கைப்பற்றி வேடசந்தூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வேடசந்தூர் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Similar News
News November 9, 2025
திண்டுக்கல்: WhatsApp மூலம் பணம் பறிபோகலாம்!

திண்டுக்கல் மக்களே, வங்கிகளின் அசல் லோகோவை பயன்படுத்தி ரூ.7,500 வெகுமதி தருவதாக கூறி, பலரது ‘வாட்ஸ் ஆப்’ எண்ணுக்கு ஒரு ‘லிங்க்’ வருவதாக புகார் எழுந்துள்ளது. அது மோசடி செய்யும் நோக்குடன் சைபர் குற்றவாளிகளால் அனுப்பப்படும் ‘லிங்க்’ ஆகும். விவரம் தெரியாத பலரும் இதனால் ஏமாற்றப்படலாம். அந்த லிங்கை கிளிக் செய்தல் பணம் பறிபோகலாம். எனவே, உஷாரா இருங்க. இதுபோன்ற லிங்கை நம்பி ஏமாற வேண்டாம். SHARE பண்ணுங்க!
News November 9, 2025
திண்டுக்கல் அருகே சிறுமி உட்பட 2 பேர் பலி!

திண்டுக்கல்: தொப்பம்பட்டி ஒன்றியத்திற்குட்பட்ட அத்திவலசு கிராமம் வழியாகச் செல்லும் அமராவதி ஆற்றில், 14 வயதுச் சிறுமி ஒருவர் எதிர்பாராதவிதமாக ஆற்றின் ஆழமான பகுதிக்குச் சென்றுள்ளார். இதனை கண்ட உடன் வந்த ஹசன் என்பவர், அச்சிறுமியை காப்பாற்றும் நோக்கில் உடனடியாக ஆற்றில் குதித்துள்ளார். இருப்பினும், துரதிர்ஷ்டவசமாக இருவரும் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.
News November 9, 2025
திண்டுக்கல் மாவட்ட காவல்துறை அதிகாரியின் ரோந்து விவரம்

திண்டுக்கல் மாவட்ட காவல்துறை அதிகாரியின் ரோந்து விவரம் இன்று நவம்பர் 8 சனிக்கிழமை இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை திண்டுக்கல் சுற்றுவட்டார பகுதியான திண்டுக்கல் ஊடகம், திண்டுக்கல் நகர், நிலக்கோட்டை, ஒட்டன்சத்திரம், பழனி, கொடைக்கானல், வேடசந்தூர் ஆகிய பகுதிகளில் ஏதேனும் புகார் இருந்தால் மேலே கொடுக்கப்பட்டுள்ள காவல் துறை அதிகாரியின் தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளவும்.


