News September 26, 2024
வேடசந்தூர் திமுக தெற்கு ஒன்றிய பொருளாளர் படுகொலை

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் திமுக தெற்கு ஒன்றிய பொருளாளர் மாசி. இவர் நேற்று வேடசந்தூர் அருகே உள்ள சேனன்கோட்டை என்ற இடத்தில் மர்ம நபர்களால் வெட்டிக்கொலை செய்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த வேடசந்தூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Similar News
News August 12, 2025
திண்டுக்கல்லில் இலவச Tally பயிற்சியுடன் வேலை! APPLY

திண்டுக்கல் மக்களே.., தமிழக அரசின் ‘வெற்றி நிச்சயம்’ திட்டத்தின் கிழ் இலவச ’Tally’ பயிற்சி திண்டுக்கல்லில் வழங்கப்படவுள்ளது. வருகிற ஆக.18ஆம் தேதி தொடங்கவுள்ள இந்தப் பயிற்சிக்கு ஏதேனும் ஓர் டிகிரி படித்திருந்தாலே போதுமானது. தமிழ்நாடு மொத்தம் இதற்கு 6603 காலியிடங்கள் உள்ளன. இதுகுறித்து விவரங்கள் அறிய, விண்ணப்பிக்க <
News August 12, 2025
மாவட்ட அளவிலான புகைப்படப் போட்டி அரிய வாய்ப்பு!

திண்டுக்கல் மாவட்டத்தில் 12 வது புத்தக திருவிழாவை முன்னிட்டு தமிழக இலக்கிய களம் நடத்தும் மாவட்ட அளவிலான புகைப்படப் போட்டி நடைபெறுகிறது. புகைப்படத்தின்(Soft Copy) மென் நகலை dikbookfair2025@gmail.com மின்னஞ்சலுக்கு அனுப்ப வேண்டும். போட்டியில் கலந்து கொள்ள விரும்புவோர் புகைப்படங்களை ஆகஸ்டு 22 ஆம் தேதி வரை அனுப்பலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
News August 11, 2025
கீரனுார் அருகே செங்கல் சூளையில் மரணம் போலீசார் அறிக்கை!

திண்டுக்கல் மாவட்டம் கீரனூர் காவல் நிலையச் சரகம் தும்பலப்பட்டி கிராமத்தில் அமைந்துள்ள தனியார் செங்கல் சேம்பரில் சந்தேகத்திற்கு இடமாக ஒரு ஆண் இறந்து கிடப்பதாக தகவல் கிடைக்கப்பெற்றது. மேற்படி தகவலின் அடிப்படையில் கீரனூர் காவல் ஆய்வாளர் சம்பவயிடம் சென்று விசாரணை மேற்கொண்டார். இந்த மரணமானது மேற்படி இருவருக்கும் இடையே காதல் தொடர்பான பிரச்சனையில் ஏற்பட்ட மரணம் என்று விசாரணையில் தெரியவருகிறது.