News April 13, 2024
வேகமெடுத்த எய்ம்ஸ் கட்டுமான பணி!
மதுரை எய்ம்ஸ் கட்டுமான பணிகள் கடந்த மாதம் முதல் துவங்கி நடைபெற்று வருகிறது. அடிக்கல் நாட்டப்பட்டு சுமார் 4 ஆண்டுகள் கழித்து கட்டுமான பணிகள் துவங்கியுள்ள நிலையில் இந்த விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்நிலையில் எய்ம்ஸ் கட்டுமான பணிகள் தற்போது வேகமெடுத்து வருவதாகவும் இதுவரை 13 வகையிலான முதல் கட்ட கட்டுமான பணிகள் நிறைவுற்றுள்ளதாகவும் எய்ம்ஸ் நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
Similar News
News November 20, 2024
அரிட்டாபட்டியில் சுரங்கம் அமைக்க விண்ணப்பிக்கவில்லை
அரிட்டாபட்டியில் சுரங்கம் அமைக்க வேதாந்தா நிறுவனம் விண்ணபிக்கவில்லை என தமிழக அரசு தரப்பில் தற்போது இன்று(நவ.20) தகவல் வெளியாகியுள்ளது. பின் அனுமதியளித்த மத்திய அரசு எந்த பகுதியில், எந்த அளவுக்கோலில் அனுமதி அளித்தது என்பது குறித்து ஆய்வு நடந்து வருகிறது. சுரங்கம் அமைப்பது குறித்து சில தினங்களாக தமிழ்நாட்டில் கருத்து அலைகள் வீசிவந்த நிலையில் அது குறித்த விளக்கம் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.
News November 20, 2024
மதுரை மக்களுக்கு சுகாதாரத்துறை எச்சரிக்கை
மதுரையில் தொடர் மழை பெய்து வருவதால் நன்னீரில் கொசுக்கள் உற்பத்தியாகி காய்ச்சல் பரவுகிறது. மாவட்டத்தில் 100க்கும் மேற்பட்டோருக்கு காய்ச்சல் பாதித்து அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இருவருக்கு டெங்கு பாதித்துள்ளது. எனவே மக்கள் வீடுகளில் தண்ணீரை கொதிக்க வைத்து பருக வேண்டும் என சுகாதாரத் துறையின் அறிவுறுத்தல் வழங்கியுள்ளது.
News November 20, 2024
மதுரையில் இன்று இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு
மதுரை உட்பட 13 மாவட்டங்களில் மழை தொடரும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வட கிழக்கு பருவமழை தொடங்கியது முதல் தென் மாவட்டங்களில் அவ்வப்போது மழை பெய்து வருகிறது. தொடர் மழையால் இன்று(நவ.,20) இதுவரை 3 மாவட்டங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து மழை பெய்து வருவதால் வெளியில் செல்லும் மக்கள் முன்னெச்சரிக்கையுடன் செல்ல அறிவுறுத்தப்படுகின்றனர்.