News April 15, 2024

வேகத்தடை அமைக்க கோரி சாலை மறியல் போராட்டம்

image

பள்ளிபாளையம், சங்ககிரி சாலையில் வெடியரசம்பாளையம் என்ற பகுதியில், நேற்று இரவு தனியார் பேருந்து மோதி வட மாநில இளைஞர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். இந்நிலையில் தொடர்ந்து விபத்துக்கள் நடைபெறுவதால், வேகத்தடை அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து சாலை மறியல் போராட்டத்தை மேற்கொண்டனர். சம்பவயிடத்திற்கு வந்த போலீசார், பொதுமக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

Similar News

News December 29, 2025

நாமக்கல் அருகே சோகம்: தம்பதி விபரீத முடிவு!

image

நல்லுார் அருகே கள்ளிபாளையத்தை சேர்ந்த தம்பதி பச்சமுத்து(85), தங்கம்மாள்(82). இவர்கள் தோட்டத்தில் வசித்து வந்தனர். இவர்களது மகன் வெற்றிவேல், சில ஆண்டுகளுக்கு முன் இறந்தார். மகன் இறப்புக்கு பின், உறவினர்கள் யாரும் இவர்களை பராமரிக்கவில்லை. இதனால் மன உளைச்சலில் இருந்துள்ளனர். இந்நிலையில் இருவரும் பூச்சிக்கொல்லி மருந்தை குடித்து இறந்து கிடப்பது தெரியவந்தது. நல்லார் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

News December 29, 2025

பரமத்தி அருகே விபத்து: சம்பவ இடத்திலேயே பலி!

image

ராசாம்பாளையம் டோல்கேட் பகுதியில், கள்ளக்குறிச்சியை சேர்ந்த துரைராசு என்பவர் லாரியை நிறுத்தி விட்டு, எதிரே உள்ள கடைக்கு தண்ணீர் கொண்டுவர சாலையை கடந்துள்ளார். அப்போது நாமக்கல் நோக்கி சென்ற பஸ், அவர் மீது மோதியதில் படுகாயமடைந்தார். அவரை நாமக்கல் GHக்கு அனுப்பி வைத்தனர். அங்கு ஏற்கனவே இறந்து விட்டது தெரிய வந்தது. பரமத்தி போலீசார் வழக்குப் பதிந்து, விபத்து ஏற்படுத்திய சேலம் டிரைவர் சேகரை கைது செய்தனர்.

News December 29, 2025

நாமக்கல்: இரவு ரோந்து போலீசார் விவரம்

image

நாமக்கல் மாவட்டத்தில் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கில், நேற்று (டிச.28) இரவு முதல் இன்று காலை வரை காவல் ரோந்து பணிக்காக காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். குற்ற செயல்களை தடுக்கும் வகையில் மற்றும் சட்ட ஒழுங்கை பராமரிக்கும் நோக்கில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இரவு நேரங்களில் அவசர நிலை ஏற்பட்டால், பொதுமக்கள் தங்களது பகுதி காவல் அதிகாரியை நேரடியாக தொடர்பு கொள்ளலாம்.

error: Content is protected !!