News January 7, 2026

வெள்ளி மீது ஆர்வம் காட்டும் GEN Z தலைமுறை!

image

தங்கத்தை விட வெள்ளி மீது GEN Z , மில்லினியல் தலைமுறையினர் ஆர்வம் காட்டுவதாக Deloitte India அறிக்கை வெளியிட்டுள்ளது. மேலும், சுமார் 86% இந்திய நுகர்வோர் தற்போது தங்க நகைகளை வெறும் ஆபரணங்களாக மட்டும் கருதாமல், முதலீடாகவும் பார்க்கின்றனர். முன்பு திருமணத்திற்கு மட்டுமே 70% நகை விற்பனையான நிலையில், இப்போது பிறந்தநாள், திருமணநாள், தினசரி பயன்பாட்டுக்கும் நகைகள் வாங்குவது ஆய்வில் தெரியவந்துள்ளது.

Similar News

News January 27, 2026

பிப்ரவரி நடுவில் கூட்டணி முடிவு: பிரேமலதா

image

பிப்ரவரி மாதம் முழுவதும் நேரம் இருக்கிறது, எனவே நல்ல முடிவெடுத்து பிப்., நடுவில் கூட்டணி பற்றி அறிவிப்போம் என பிரேமலதா கூறியுள்ளார். யார் யாருக்கு எந்த தொகுதி என முடிவு செய்து வேட்பாளர்களை அறிவிப்போம் என்றும் அவர் தெரிவித்துள்ளார். இதுவரை தேமுதிக, தங்களது கூட்டணியை இறுதி செய்யாத நிலையில், நேற்று கவர்னர் தேநீர் விருந்தின்போது தேமுதிகவின் சுதீஷ், அதிமுக தலைவர்களுடன் பேசியது பேசுபொருளானது.

News January 27, 2026

சமஸ்கிருதத்துக்கு ₹2000 கோடி, தமிழுக்கு ₹30 கோடி: அமைச்சர்

image

கல்வி, 100 நாள் வேலை திட்டம் என பலவற்றுக்கு மத்திய அரசிடம் இருந்து வர வேண்டிய நிதி வரவில்லை என அமைச்சர் ஐ.பெரியசாமி குற்றம்சாட்டியுள்ளார். சமஸ்கிருத ஆய்வுக்கு ₹2000 கோடி ஒதுக்கும் போது, தமிழ் செம்மொழி ஆய்வு நிறுவனத்திற்கு ₹30 கோடி கூட கொடுக்கவில்லை என்றும் சாடியுள்ளார். முதியோர் ஓய்வூதிய உள்பட பல திட்டங்களுக்கு, தமிழக அரசு நிதி ஒதுக்கி செயல்பாட்டுக்கு கொண்டு வந்துள்ளதாகவும் கூறியுள்ளார்.

News January 27, 2026

எனர்ஜி தரும் ABC ஜூஸ்!

image

1 ஆப்பிள், 1 சிறிய பீட்ரூட், 2 கேரட் ஆகியவற்றை சின்ன துண்டுகளாக நறுக்கி அரைத்து ஜூஸ் ஆக்கவும். வடிகட்டத் தேவையில்லை. வேண்டுமெனில் எலுமிச்சைச்சாறு, புதினா சேர்த்துக்கொள்ளலாம். இதில் ஆன்டி ஆக்சிடன்ட்ஸ், வைட்டமின்ஸ் A, B1, B2, B3, B4, B5, B6, B9, C, E, K, பொட்டாசியம், கால்சியம், பாஸ்பரஸ் என ஏகப்பட்ட சத்துகள் இருக்கின்றன. மாரடைப்பு ஏற்படுவதைத் தடுக்கவும் இந்த ஏபிசி ஜூஸ் பெரிதும் உதவுகிறது. SHARE IT.

error: Content is protected !!