News January 30, 2026

வெள்ளி இன்று கிலோவுக்கு ₹10,000 விலை குறைந்தது

image

ஜெட் வேகத்தில் உயர்ந்து வந்த <<18999179>>தங்கம்<<>>, வெள்ளி விலை இன்று(ஜன.30) பெரும் அளவில் குறைந்துள்ளது. வெள்ளி கிராமுக்கு ₹10 குறைந்து ₹415-க்கும், கிலோவுக்கு ₹10,000 குறைந்து ₹4,15,000-க்கும் விற்பனையாகிறது. சர்வதேச சந்தையில் வெள்ளி விலை 1 அவுன்ஸ்(28g) 2% விலை வீழ்ச்சியடைந்ததே இந்திய சந்தையில் வெள்ளி விலை குறைய காரணமாகும்.

Similar News

News February 4, 2026

காங்., உடன் தொகுதிகள் பற்றி பேசவில்லை: கனிமொழி

image

காங்., உடன் பேச்சுவார்த்தை நடந்து வருவதாக தெரிவித்த கனிமொழி, தொகுதிகள் பற்றி இதுவரை பேசவில்லை என தெரிவித்துள்ளார். மேலும், குழுவில் இருப்பவர்களே கூட்டணி & தொகுதிப் பங்கீடு உள்பட மற்ற விஷயங்களை பேசுவார்கள் என்றும் கூறியுள்ளார். சமீபமாக திமுக – காங்., கூட்டணியில் புகைச்சல் உண்டான நிலையில், இரு கட்சியினர் தரப்பிலும் கூட்டணி தொடர்வது உறுதி செய்யப்பட்டுள்ளது.

News February 4, 2026

SC-ல் அனல் பறக்க வாதாடிய CM மம்தா

image

SIR-க்கு எதிரான வழக்கில் SC-ல் அம்மாநில CM மம்தா பானர்ஜியே நேரடியாக ஆஜராகி வாதாடி இருக்கிறார். 24 ஆண்டுகளுக்குப் பிறகு நடக்கும் SIR பணிகளை செய்ய 2 வருடங்கள் ஆகும் என்ற அவர், வெறும் 2 மாதங்களில் செய்து முடிக்க ECI முயற்சிப்பதன் பின்னணியில் ஏதோ ஒரு மறைமுகத் திட்டம் இருப்பதை உணர முடிகிறது என கூறியுள்ளார். மேலும், பணிகளை விரைந்து முடிக்க அவசரப்படுத்தியதால் குளறுபடி நடந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

News February 4, 2026

தாயுடன் உறவில் இருந்தவரை கொன்றுவிட்டு செல்பி

image

தாயுடன் முறையற்ற உறவிலிருந்த நபரை கொடூரமாக கொன்ற இளைஞர், அவரது உடல் மீது கால் வைத்து செல்பி எடுத்த சம்பவம் அரங்கேறியுள்ளது. கர்நாடகாவின் பெலகாவியை சேர்ந்த பெண் திருமணத்தை மீறிய உறவிலிருந்துள்ளார். இது அந்த பெண்ணின் மகனுக்கு தெரியவரவே சம்பந்தப்பட்ட பசப்பாவை (54) கண்டித்துள்ளார். ஆனாலும், பசப்பா உறவை தொடர்ந்ததால் ஆத்திரமடைந்த இளைஞர், அவரை சரமாரியாக வெட்டி கொலை செய்துவிட்டு போலீசில் சரணடைந்துள்ளார்.

error: Content is protected !!