News January 26, 2026
வெள்ளி இன்று கிலோவுக்கு ₹10,000 உயர்வு!

<<18960694>>தங்கத்துடன்<<>> போட்டிப் போட்டுக் கொண்டு வெள்ளி விலை தினந்தோறும் உயர்ந்து வருகிறது. அந்த வகையில் இன்று(ஜன.26) வெள்ளி விலை 1 கிராம் ₹10 உயர்ந்து ₹375-க்கும், பார் வெள்ளி கிலோவுக்கு ₹10,000 உயர்ந்து ₹3,75,000-க்கும் விற்பனையாகிறது. சர்வதேச சந்தையில் வெள்ளியின் விலை 7% உயர்ந்து ஒரு அவுன்ஸ்(28g) $108-க்கு விற்பனையாவது குறிப்பிடத்தக்கது.
Similar News
News February 7, 2026
போரை முடிவுக்கு கொண்டுவர அமெரிக்கா விருப்பம்: உக்ரைன்

ரஷ்யா-உக்ரைன் இடையேயான போரை ஜூன் மாதத்திற்குள் முடிவுக்கு கொண்டுவர அமெரிக்கா விரும்புவதாக உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார். இன்னும் ஒரு வாரத்திற்குள் இரு தரப்பும் சந்தித்து பேசவேண்டுமென அமெரிக்கா முன்மொழிந்துள்ளதாகவும், அமெரிக்காவில் நடைபெறவுள்ள பேச்சுவார்த்தையில் உக்ரைன் பங்கேற்கவுள்ளதாகவும் கூறியுள்ளார். இதில் ரஷ்யாவின் நிலைப்பாடு குறித்து தனக்கு தெரியாது என்றும் குறிப்பிட்டுள்ளார்.
News February 7, 2026
நடிகர் பொன்னம்பலத்திற்கு விஷம்.. பரிதாப நிலை

உடல்நலம் பாதிக்கப்பட்ட நடிகர் பொன்னம்பலம், தனது நிலைக்கு கூட பிறந்த அண்ணனே காரணம் என குற்றம்சாட்டியுள்ளார். குடும்ப பிரச்னையால் தன்னுடைய உதவியாளரை வைத்து ரசத்தில் குதிரை பொடியை கலந்து கொடுத்துவிட்டதாகவும், இதனால் 3 வருஷமாக பேதி ஏற்பட்டு உடம்பே வீணாகிவிட்டதாகவும் வேதனையுடன் தெரிவித்துள்ளார். மேலும் பீரில் ஸ்லோ பாய்சன் கலந்து கொடுத்ததால் சிறுநீரகம் பாதிக்கப்பட்டதாகவும் கண்ணீருடன் கூறியுள்ளார்.
News February 7, 2026
வோடபோன் ஐடியா சூப்பர் பிளான் அறிமுகம்!

வோடபோன் ஐடியா (Vi) ‘நான்-ஸ்டாப் ஹீரோ’ என்ற புதிய ப்ரீபெய்ட் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இது அன்லிமிட்டட் அழைப்புகள் மற்றும் 4G/5G டேட்டா & ஒரு நாளைக்கு 100 SMS ஆகியவற்றை வழங்குகிறது. வாடிக்கையாளர்கள் ₹365(28 நாள்கள்), ₹649(56 நாள்கள்), ₹979(84 நாள்கள்) திட்டங்களுடன் அதிவேக இணையத்தை அனுபவிக்க முடியும். சில திட்டங்களில் அமேசான் பிரைம் மற்றும் நெட்ஃபிளிக்ஸ் போன்ற OTT சலுகைகளும் அடங்கும்.


