News December 23, 2025
வெள்ளியில் முதலீடு செய்வது சரியா?

நடப்பாண்டின் துவக்கத்தில் ₹90,000 ஆக இருந்த ஒரு கிலோ வெள்ளி, தற்போது ₹2.14 லட்சமாக ஏற்றம் கண்டுள்ளது. இது முதலீட்டாளர்களிடையே பெரும் கவனத்தை பெற்று வருகிறது. எனினும் வெள்ளி முதலீட்டில் லாபம் சீராக கிடைப்பதில்லை. எனவே தங்கம், வெள்ளி ஆகிய இரண்டிலும் கலந்து முதலீடு செய்தால், வரும் காலத்தில் வெள்ளி விலையில் அதீத மாற்றம் ஏற்பட்டால் தங்கம் அதனை சமன்படுத்தும் என்கின்றனர் நிபுணர்கள்.
Similar News
News December 29, 2025
பாரதிராஜா கவலைக்கிடமா..? Clarity

உடல்நலக்குறைவு காரணமாக கடந்த 2 நாள்களுக்கு முன் இயக்குநர் பாரதிராஜா <<18691522>>ஹாஸ்பிடலில் <<>>அனுமதிக்கப்பட்டார். இதனிடையே அவரின் உடல்நிலை மோசமாக உள்ளதாக சோஷியல் மீடியாவில் தகவல்கள் வெளியானது. இந்நிலையில், பாரதிராஜா நலமாக உள்ளதாக அவரது குடும்பத்தினர் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. மேலும் அவரின் உடல்நிலை குறித்து வெளிவரும் மற்ற தகவல்கள் எதையும் நம்ப வேண்டாம் எனவும் அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.
News December 29, 2025
FLASH: தங்கம் விலை தடாலடியாக மாறியது

2025-ம் ஆண்டில் மட்டும் தங்கம் விலை 80% வரை அதிகரித்திருப்பது நடுத்தர மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அதாவது, ஜன.1-ல் 22 கேரட் தங்கத்தின் விலை 1 சவரன் ₹57,200 மட்டுமே. ஆனால் இன்றைய நிலவரப்படி, 1 சவரன் ₹1,04,160-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதேபோல், இந்தாண்டு தொடக்கத்தில் ₹79-க்கு விற்கப்பட்ட 1 கிராம் வெள்ளி, தற்போது ₹281-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. 2026-ல் எப்படி இருக்குமோ?
News December 29, 2025
உடல் பருமனை கட்டுப்படுத்துவது எப்படி?

இன்றைய அவசர உலகில் உடல் பருமன் என்பது பெரும் பிரச்னையாகி வருகிறது. குறிப்பாக குழந்தைகளிடையே உடல் பருமன் என்பது வேகமாக அதிகரித்து வருகிறது. இதனால் சிறுவயதிலேயே நீரிழிவு, தைராய்டு மற்றும் இதய நோய்களின் பாதிப்பும் சமூகத்தில் அதிகரித்தபடியே உள்ளது. இந்நிலையில் என்னவெல்லாம் செய்தால் உடல் எடையை கட்டுப்பாட்டில் வைத்திருக்கலாம் என்பதை வலது பக்கம் Swipe செய்து பாருங்கள்.


