News April 14, 2024

வெள்ளியங்கிரி மலை ஏறிய பக்தர் மூச்சு திணறி பலி

image

கோவை மாவட்டத்தின் அடையாளங்களாக ஏராளமான இடங்கள் உள்ளன. ஆனால், வெளியூர் மக்களும் விரும்பும் ஓர் இடம் வெள்ளியங்கிரி மலை. இந்நிலையில், கோவை வெள்ளியங்கிரி மலை ஏறிய கோவை போத்தனூரை சேர்ந்த சீனிவாசன் என்ற பக்தர் இன்று முதல் மலை ஏறிக்கொண்டிருக்கும் போது திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டு உயிரிழந்தார். கடந்த 2 மாதங்களில் வெள்ளியங்கிரி மலை ஏறிய பக்தர்கள் 7 பேர் மூச்சுத்திணறலால் உயிரிழந்துள்ளனர்.

Similar News

News November 3, 2025

கோவை: இரவு ரோந்து போலீசார் விவரம்

image

கோவை மாவட்டத்தில் இன்று (03.11.25) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம். அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

News November 3, 2025

உதவி கேட்பது போல் நடித்து இளைஞரிடம் செல்போன் பறிப்பு.

image

சிங்காநல்லூரை சேர்ந்த டெலிவரி ஊழியர் மாரீஸ்வரன் நேற்று அப்பகுதியில் உள்ள டீக்கடையில் டீ அருந்திய போது, அங்கு வந்த இளைஞர் தனது உறவினருக்கு விபத்து ஏற்பட்டுள்ளது. அங்கு இறக்கி விட முடியுமா? என கேட்டுள்ளார். பரிதாபத்தில் அவரும் அங்கு கொண்டு சென்று விட்டுள்ளார். அப்போது புதரில் மறைந்திருந்த இருவர் என மூவரும் சேர்ந்து மாரீஸ்வரனிடம் செல்போனை பறித்து சென்றனர். சிங்காநல்லூர் போலீசார் விசாரிக்கின்றனர்.

News November 3, 2025

‘பெண்கள் பாதுகாப்பை குழிதோண்டி புதைத்த திமுக அரசு’

image

அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் இன்று வெளியிட்ட அறிக்கையில், “கோவை விமான நிலையம் பின்புறம் நேற்றிரவு(நவ.2) இளம்பெண் மர்ம நபர்களால் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார் என்பது போன்று வரும் செய்திகள் தமிழகத்தில் காவல்துறை என்று ஒன்று உள்ளதா? என்ற கேள்வியை அனைவரிடமும் எழுப்பியுள்ளது. பெண்கள் பாதுகாப்பை குழிதோண்டி புதைத்துவிட்ட ஸ்டாலின் மாடல் திமுக அரசுக்கு எனது கடும் கண்டனம் என குறிப்பிட்டுள்ளார்.

error: Content is protected !!