News December 4, 2025

வெள்ளிச்சந்தையில் 5 தேடப்படும் குற்றவாளிகள்

image

வெள்ளிச்சந்தை காவல் நிலையத்தில் 5 பேர் தேடப்படும் குற்றவாளிகளாக உள்ளனர். இதில் கிருஷ்ண பெருமாள் தேடப்படும் குற்றவாளியாக நீதிமன்றத்தால் அறிவிக்கப்பட்டுள்ளார். அஜின்,சுபாஷ், சுமன், சுரேஷ் ஆகியோர் நீதிமன்றத்தால் தேடப்படும் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட உள்ளதாக நீதிமன்றம் தெரிவித்துள்ளது. இவர்கள் மீது வழக்கு உள்ள நிலையில் நீதிமன்றத்தில் ஆஜராகாததால் தேடப்படும் குற்றவாளிகளாக அறிவிக்கப்படஉள்ளனர்.

Similar News

News December 3, 2025

குமரி: 250 லிட்டர் விஷ சாராயம் பறிமுதல்

image

கருங்கல் சப்-இன்ஸ்பெக்டர் முத்துகிருஷ்ணன் மற்றும் போலீசார் திக்கணங்கோடு பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அப்பகுதியில் மறைவான இடத்தில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 250 லிட்டர் விஷச்சாராயத்தை பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக ரமேஷ் (45) ,கிருஷ்ணகுமார் ( 49) ஆகியோரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

News December 3, 2025

மார்த்தாண்டம் சந்தையில் ஒருவர் சடலமாக மீட்பு

image

நல்லூர் பாறைவிளையைச் சேர்ந்த, திருமணம் ஆகாத காய்கறி வியாபாரி பீட்டர் (35), குடிபழக்கம் இருந்ததாக சொல்லப்படுகிறது. நேற்று டிச.2ம் தேதி இரவு மார்த்தாண்டம் காய்கறி சந்தையில் மரணமடைந்த நிலையில் கிடந்தார். தகவல் பெற்ற மார்த்தாண்டம் போலீஸார் சம்பவ இடத்திற்கு வந்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

error: Content is protected !!