News July 26, 2024
வெள்ளாடு வளர்ப்பு பயிற்சி முகாம்

திருவண்ணாமலை, கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழக பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையத்தில் வருகிற 30ஆம் தேதி அறிவியல் முறையில் வெள்ளாடு வளர்ப்பு ஒரு நாள் பயிற்சி முகாம் நடைபெற உள்ளது. இம்முகாமில் கால்நடை வளர்க்கும் விவசாயிகள் கலந்து கொண்டு பயன்பெறலாம். பயிற்சியில் கலந்து கொள்ள வருபவர்கள் ஆதார் அட்டை நகல் கொண்டு வர வேண்டும் என்ற தகவலை ஆராய்ச்சி மையத் தலைவர் அருளானந்தம் நேற்று தெரிவித்துள்ளார்.
Similar News
News July 8, 2025
தி.மலை: உள்ளூரில் வங்கி அதிகாரி வேலை

பேங்க் ஆப் பரோடா வங்கியில் ‘லோக்கல் பேங்க் ஆபிசர்’ எனப்படும் உள்ளூர் வங்கி அதிகாரி பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. மொத்தம் 2,500 பணியிடங்கள் நிரப்படுகின்றன. தமிழகத்தில் மட்டும் 60 பணியிடங்கள் உள்ளன. ரூ.48,480 – 85,920 வரை . சம்பளம் வழங்கப்படும். தமிழ் தெரிந்திருக்க வேண்டும். டிகிரி இருந்தால் போதும் ஜூலை 24ஆம் தேதிக்குள் <
News July 8, 2025
தி.மலை ஆனி மாத கிரிவல நேரம் அறிவிப்பு

தி.மலை அண்ணாமலையார் கோவில் சார்பில் ஆனி மாதத்திற்கான பவுர்ணமி கிரிவலம் செல்ல உகந்த நேரம் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, வரும் 10 ஆம் தேதி அதிகாலை 2.33 மணி தொடங்கி 11 ஆம் தேதி அதிகாலை 3.08 மணி வரை கிரிவலம் செல்லலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. *ஆனி மாதத்தில் கிரிவலம் செல்வதால் பல நன்மைகள் கிட்டும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. உறவினர்களுக்கு பகிர்ந்து ஒன்றாக கிரிவலம் செல்லுங்கள் பக்தர்களே*
News July 8, 2025
களம்பூர் காவல் நிலைய துணை ஆய்வாளர் உயிரிழப்பு

திருவண்ணாமலை மாவட்டம் போளூர் வட்டம் களம்பூர் காவல் நிலையத்தில் பணியாற்றி வந்த சிறப்பு உதவி ஆய்வாளர் உதவி ஆய்வாளர் குபேந்திரன் இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்த போது நேற்று முன்தினம் வாகன விபத்து ஏற்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று 07/07/2025 அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.