News September 29, 2024

வெள்ளவாரி வாய்க்காலில் ஆண் சடலம்

image

புதுச்சேரி, கருவடிக்குப்பம் அருகே வெள்ளவாரி வாய்க்காலில், நேற்று ஆண் சடலம் ஒன்று மிதந்தது. தகவலறிந்த, லாஸ்பேட்டை போலீசார், சம்பவ இடத்திற்கு விரைந்து சடலத்தை தீயணைப்பு படையினர் உதவியுடன் மீட்டு, அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். இதுகுறித்து, லாஸ்பேட்டை போலீசார் வழக்குப் பதிந்து, விசாரணை நடத்தியதில் இறந்தவர், சோலை நகரை சேர்ந்த வேலு, எனவும், இவர் அடிக்கடி, மது குடித்து வந்ததும் தெரிய வந்தது.

Similar News

News September 14, 2025

புதுவை: எக்ஸ்பிரஸ் ரயிலில் கஞ்சா பொட்டலங்கள்!

image

தெலுங்கான மாநிலம் கச்சிகுடாவில் இருந்து புதுவைக்கு எக்ஸ்பிரஸ் ரெயில் வந்த போது ரெயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் சூரத்குமார் தலைமையில், போலீசார் ரெயில் பெட்டிகளை சோதனை செய்த போது சாக்கு பை ஒன்று கிடந்தது. போலீசார் அந்த சாக்குப்பையை பிரித்து பார்த்தனர். அதில் 2 கிலோ கஞ்சா பொட்டலங்கள் இருந்தது அவற்றை பறிமுதல் செய்த போலீசார் கஞ்சா கடத்தி வந்த நபர் யார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

News September 14, 2025

புதுவை: கூடுதல் விலையில் மது விற்ற கடைகளுக்கு அபராதம்

image

புதுவை கலால்துறை துணை ஆணையரும், எடையளவு துறை கட்டுப்பாட்டு அதிகாரியுமான மேத்யூ பிரான்சிஸ் தலைமையில், அதிகாரிகள் புதுவை நகர் முழுவதும் நேற்று திடீர் சோதனை நடத்தினர். அப்போது புதுவையில் உள்ள 10 மதுக்கடைகளில் கூடு தல் விலைக்கு மதுபானம் விற்பனை செய்த கடைகளுக்கு தலா ரூ.2,500 அபராதம் விதிக்கப்பட்டது. மேலும் பாண்லே பால் அதிக விலைக்கு விற்ற 2 மளிகை கடைகளுக்கு ரு.2500 அபராதம் விதிக்கப்பட்டது.

News September 14, 2025

புதுவை மக்களே.. உங்கள் பெயரில் இத்தனை SIM -ஆ?

image

புதுவை மக்களே… உங்கள் ஆதார் எண்ணை பயன்படுத்தி எத்தனை சிம் கார்டுகள் பயன்பாட்டில் உள்ளதென்று உங்களுக்கு சந்தேகம் உள்ளதா? அப்படியென்றால் மத்திய அரசின் சஞ்சார்சாத்தி இணையம் மூலமாக உங்கள் ஆதார் எண்ணை பயன்படுத்தி எத்தனை சிம் கார்டுகள் பயன்பாட்டில் உள்ளது என்பதை தெரிந்து கொள்ள முடியும். இங்கே <>க்ளிக் <<>>செய்து இப்போதே செக் பண்ணுங்க. இந்த பயனுள்ள தகவலை மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க.

error: Content is protected !!