News December 24, 2024
வெள்ளனூரில் கஞ்சா கடத்திய 3 பேர் கைது!
வெள்ளனூர் பகுதியில் சந்தேகத்திற்கு இடமான இருசக்கர வாகனத்தில் மூன்று பேர் சுற்றித் திரிவதாக வந்த தகவலை அடுத்து அங்கு சென்ற திருக்கோகர்ணம் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் சியாமளாதேவி மூன்று பேரையும் பிடித்து விசாரணை செய்ததில் புதுகையை சேர்ந்த லோகேஸ்வரன், முகமது அலி, செல்வம் என தெரியவந்தது. பின்னர், அவர்களிடம் ரூ.25,000 மதிப்புள்ள 21/2 கஞ்சா, இருசக்கர வாகனம் மொபைல் போன் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.
Similar News
News December 24, 2024
பயணியர் நிழற்குடை கட்டுமானம்: ஆட்சியர் ஆய்வு
கீரமங்கலம் கிராமம் காமராஜ் நகரில் சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியிலிருந்து, ரூபாய் பத்து லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் பயணிகள் நிழல் கூறை கட்டுமான பணியை மாவட்ட ஆட்சியர் அருணா ஆய்வு செய்தார். இந்நிகழ்வில் வருவாய்த் துறையினர் மற்றும் ஊராட்சி நிர்வாகத்தினர் உடன் இருந்தனர்.
News December 24, 2024
பணம் வைத்து சூதாடிய 15 பேர் கைது
கீரனூர் போலீசார் நேற்று இரவு ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது பழைய கல்லு கடை பகுதியில் சிலர் பண வைத்து சூதாடியது தெரியவந்தது. இதனையடுத்து அவர்களை பிடித்து விசாரணை நடத்தியதில் கீரனூர் பகுதியை சேர்ந்த ஆறுமுகம், சந்திரசேகர்,சரவணன், இளங்கோவன்,சின்னையா, பழனி, மேகநாதன், படையப்பா, சூர்யா, சக்திவேல், சிலம்பரசன், வெள்ளையன், செந்தில்குமார் பாரதி, செந்தில்குமார் ஆகியோரை கைது செய்தனர்.
News December 23, 2024
புதுகை நாளை உணவகங்கள் இயங்காது!
புதுகை திமுக மாநகர செயலாளர் செந்தில் மறைவை முன்னிட்டு நாளை (24.12.24) இறுதி சடங்கு நடைபெற உள்ளதால் அதற்கு அஞ்சலி செலுத்தும் விதமாக புதுகையில் உள்ள அனைத்து உணவகங்களும் நாளை ஒருநாள் மூடப்படும் என சங்கத்தின் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் மாவட்ட வர்த்தக சங்கம் சார்பில் நாளை காலை 7 மணிக்கு அனைத்து வர்த்தகர்களும் ஊர்வலமாக சென்று செந்தில் உடலுக்கு அஞ்சலி செலுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.