News December 5, 2024
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 10,879 பேருக்கு பால் பாக்கெட்

ஃபெஞ்சல் புயலின் காரணமாக வெள்ளம் சூழ்ந்த பகுதிகளிலிருந்து பொதுமக்கள் மீட்கப்பட்டு 35 முகாம்களில் 19,654 நபர்கள் தங்கவைக்கப்பட்டனர். இவர்களுக்கு 15 இடங்களில் சமையல் கூடம் ஏற்படுத்தி உணவு தயாரிக்கப்பட்டு தினந்தோறும் 3 வேளை 88,650 நபர்களுக்கு உணவு வழங்கப்பட்டுள்ளது. நேற்று மட்டும் 10,879 நபர்களுக்கு பால் பாக்கெட்டுகள் வழங்கப்பட்டுள்ளது என கடலூர் கலெக்டர் தகவல் அளித்துள்ளார்.
Similar News
News August 9, 2025
குறிஞ்சிப்பாடி: நாளை ஒரு சில இடங்களில் மின்தடை

குறிஞ்சிப்பாடி பேருந்து நிலையம் அருகில் உள்ள பிரசித்தி பெற்ற புத்துமாரியம்மன் கோவிலில் நாளை (ஆகஸ்ட் 9) ஆம் தேதி திருத்தேர் திருவிழா நடைபெறுகிறது. இதனையொட்டி, குறிஞ்சிப்பாடி பேருந்து நிலையம், சாவடி, எல்லைக்கல் வீதி, சின்னகடைவீதி, கடைவீதி, பழந்தெரு மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.
News August 8, 2025
கடலூர்: ஆடி வெள்ளி கிழமையான இன்று இதை தெரிஞ்சிக்கோங்க!

ஆடி மாதத்தில் நாம் என்ன செய்ய வேண்டும், செய்ய கூடாது
செய்யக்கூடியவை!
✅.இறை வழிபாடு
✅.நேர்த்திக்கடன்கள்
✅.தாலி சரடு மாற்றுதல்
✅.ஆடிப்பெருக்கு வழிபாடு
✅.கூழ் படைத்தல்
✅.விவசாயம்
செய்யக்கூடாதவை!
❎திருமணம் மற்றும் சுப நிகழ்ச்சிகள்
❎ வீடு மாற்றம் மற்றும் கிரகப்பிரவேசம்
❎ குழந்தைகளுக்கு மொட்டை அடித்தல்
❎வளைகாப்பு
❎பெண் பார்த்தல்
போன்றவற்றை செய்ய கூடாது. அனைவருக்கும் SHARE பண்ணி தெரியப்படுத்துங்கள்!
News August 8, 2025
கடலூர்: அனைத்து துறை அலுவலர்களுடன் ஆலோசனை

மாபெரும் தமிழ்க் கனவு” தமிழ் மரபு மற்றும் பண்பாட்டுப் பரப்புரைத் திட்டம் நடத்துவதற்கான முன்னேற்பாடு பணிகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தலைமையில் அனைத்து துறை முதன்மை அலுவலர்களுடன் கடலூரில் இன்று (ஆக.8) ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் மாவட்ட வருவாய் அலுவலர் இராஜசேகரன், பெரியார் கலைக் கல்லூரி முதல்வர் ராஜேந்திரன் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.