News November 24, 2025
வெள்ளகோவிலில் விபத்து: இளைஞர் உயிரிழப்பு

வெள்ளகோவிலைச் சேர்ந்தவர் செல்வராஜ் மகன் பழனிவேல். இவருக்கு 6 மாதங்களுக்கு முன் திருமணம் நடைபெற்றது. இவர் கடந்த 16ம் தேதி பைக்கில் சென்று கொண்டு இருந்தார். அப்போது, முன் சென்று கொண்டிருந்த பைக் மீது இவர்கள் சென்ற பைக் மோதியது. இதில் பழனிவேல் பலத்த காயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் அவர் நேற்று முன்தினம் உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
Similar News
News November 24, 2025
திருப்பூர் மாவட்டத்தில் நல்ல மழை

திருப்பூர் மாவட்டத்தில் நேற்று காலை முதல் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. தொடர்ந்து மதியம் திருப்பூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்தது. இதனால் சாலைகளில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியதால் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகினர். இந்நிலையில் திருப்பூர் மாவட்டம் முழுவதும் இன்று காலை 8 மணி நிலவரப்படி 470.40 மி.மீட்டர் மழை பதிவாகி உள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளனர்.
News November 24, 2025
அவிநாசி அருகே விபத்து: 12 பேர் காயம்

சேலத்தைச் சேர்ந்த 22 அய்யப்ப பக்தர்களுடன், சபரிமலைக்கு பஸ் ஒன்று புறப்பட்டது. இதனையடுத்து நேற்று இரவு திருப்பூர் அவிநாசி அருகே வந்த போது இடதுபுற பின் பக்க டயர் வெடித்ததில் பஸ் ரோட்டில் கவிழ்ந்தது. இதில், 12 பக்தர்கள் காயமடைந்தனர். மேலும், இவ்விபத்து குறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
News November 24, 2025
திருப்பூரில் வசமாக சிக்கிய இருவர் அதிரடி கைது

திருப்பூர் மத்திய காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட ஆண்டிபாளையம் பகுதியில் மத்திய போலீசார் சோதனை பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சட்டவிரோத லாட்டரி விற்பனை நடைபெறுவதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் சோதனை மேற்கொண்டு கந்தசாமி மற்றும் சிங்கராஜ் ஆகியோரை கைது செய்து அவர்களிடமிருந்து லாட்டரி சீட்டுகளை பறிமுதல் செய்துள்ளனர்.


