News January 2, 2026

வெளிநாட்டு கொய்யா சாப்பிடாதீங்க!

image

நீரிழிவு நோயாளிகள் டென்னிஸ் பந்து அளவுக்கு இருக்கும் வெளிநாட்டு கொய்யாவை சாப்பிட கூடாது என டாக்டர்கள் அறிவுறுத்துகின்றனர். அதில் நார்ச்சத்து குறைவாக இருப்பதால், அதில் இருக்கிற சர்க்கரைச்சத்து வெகு சீக்கிரம் ரத்தத்தில் கலந்துவிடும் என எச்சரிக்கின்றனர். இதற்கு பதிலாக, நாட்டு கொய்யா, பப்பாளி, சாத்துக்குடி, கமலா ஆரஞ்சு, தர்பூசணி, நாவல் பழம் ஆகியவற்றை சாப்பிடலாம் என பரித்துரைக்கின்றனர்.

Similar News

News January 30, 2026

BREAKING: தங்கம் விலை சவரனுக்கு ₹4,800 குறைந்தது

image

தங்கம் விலை <<18989965>>நேற்று<<>> வரலாறு காணாத உச்சத்தை தொட்ட நிலையில், இன்று (ஜன.30) குறைந்துள்ளது. 22 கேரட் தங்கம் 1 கிராம் ₹600 குறைந்து ₹16,200-க்கும், சவரனுக்கு ₹4,800 குறைந்து ₹1,29,600-க்கும் விற்பனையாகிறது. இதனால் நகைப்பிரியர்கள் சற்று நிம்மதி பெருமூச்சு விட்டுள்ளனர். சர்வதேச சந்தையில் ஏற்படும் மாற்றங்களால் தங்கம் விலை ஏற்ற இறக்கங்களை கண்டு வருகிறது.

News January 30, 2026

பிப்.1 அன்று ஏன் பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது?

image

இந்தியாவில் பிப்ரவரி இறுதியில் பட்ஜெட் தாக்கல் செய்யும் நடைமுறையை ஆங்கிலேயர்கள் அறிமுகப்படுத்தினர். சுதந்திரத்திற்கு பிறகும் இதுவே நடைமுறையில் இருந்தது. ஆனால், 2017-ல் அப்போதைய FM அருண் ஜெட்லி, பிப்ரவரி 1-ம் தேதி பட்ஜெட் தாக்கல் செய்தார். ஏப்ரலில் தொடங்கும் நிதியாண்டுக்கு தேவையான திட்டமிடல்களுக்கு போதிய கால அவகாசம் கிடைக்கும் வகையில் இந்த மாற்றம் செய்யப்பட்டது.

News January 30, 2026

சற்றுமுன்: மதுபானங்களின் விலை குறைகிறது

image

இந்தியா – ஐரோப்பிய யூனியன் இடையேயான தடையற்ற வர்த்தகம் இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. இதில் மதுப்பிரியர்களுக்கு மகிழ்ச்சியளிக்கும் விதமாக ஒரு தகவல் கிடைத்துள்ளது. அதாவது, பீர் மீதான வரி 110% -யிலிருந்து 60% ஆக குறைக்கப்படலாம் எனவும் Premium Wine மீதான 150% வரி 130% ஆக குறைக்கப்படலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்த வரி குறைக்கப்பட்டால் மது விலையில் மிகப்பெரிய மாற்றம் ஏற்படலாம் என கூறப்படுகிறது.

error: Content is protected !!