News December 14, 2024
வெளிநாட்டில் வேலை வாங்கித் தரும் ஏஜென்சிகள் மீது நடவடிக்கை

திருச்சியில் நேற்று குடிபெயர்வோர் பாதுகாப்பு அதிகாரி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது வெளிநாடுகளுக்கு வேலைக்கு அழைத்துச் சென்று அங்கு மோசடி செய்யும் நிறுவனங்களில் பணியமர்த்தி ஏமாற்றும் ஏஜென்சிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் திருச்சியில் செயல்படும் ஒரு ஏஜென்சியில் சோதனை செய்து ஒருவரை கைது செய்துள்ளோம் என்று தெரிவித்தார்.
Similar News
News April 2, 2026
திருச்சி: ரூ.60.95 லட்சம் பறிமுதல்

திருச்சி மாவட்டத்தில் உள்ள 9 சட்டமன்ற தொகுதிகளிலும் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த சோதனையில் கடந்த மார்ச்.15-ம் தேதி முதல் தற்போது வரை ரூ.60,95,575 பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதில் உரிய ஆவணங்கள் சமர்ப்பிக்கப்பட்டதன் அடிப்படையில் ரூ.56,68,925 விடுவிக்கப்பட்டுள்ளது. மீதம் உள்ள தொகை கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது என மாவட்ட தேர்தல் அலுவலர் தெரிவித்துள்ளார்.
News April 2, 2026
துவாக்குடி: என்ஐடியில் முதுகலை டிப்ளமோ படிப்பு தொடக்கம்!

திருச்சி தேசிய தொழில்நுட்பக் கழகத்தில், ஹெல்த் கேர் டெக்னாலஜி துறையில், புதிய முதுகலை டிப்ளமோ படிப்பு வரும் ஜூலை மாதம் முதல் தொடங்கப்பட உள்ளது. தனியார் மருத்துவமனையுடன் இணைந்து தொடங்கப்பட உள்ள இந்த படிப்பிற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம், நேற்று கையெழுத்தானது. இந்நிகழ்வில் கல்லூரி இயக்குனர் அகிலா மற்றும் மருத்துவமனை நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
News April 2, 2026
திருச்சி: B.E படித்தவர்களுக்கு அறிய வாய்ப்பு

இந்திய அரசின் பாதுகாப்புத் துறையின் கீழ் செயல்பட்டு வரும் கனரக வாகன தொழிற்சாலையில் காலியாகவுள்ள 450 Apprentice (அப்ரண்டிஸ்) பயிற்சியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.
1. வகை: மத்திய அரசு வேலை
2. பணியிடங்கள்: 450
3. வயது: 15 – 24
4. கல்வித் தகுதி: டிப்ளமோ, B.E/B.Tech, Any Degree
5. கடைசி தேதி: 20.04.2026
6. மேலும் அறிய:<
வேலை தேடுபவர்களுக்கு இந்த தகவலை SHARE பண்ணுங்க!


