News March 29, 2024
வெற்றி பெறும் மாணவிகளுக்கு பரிசுத்தொகை

பழனி ஆயக்குடி இலவச பயிற்சி மையத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வருகின்றனர். தமிழ்நாடு அரசு நடத்தும் போட்டி தேர்வுகளில் வெற்றி பெற்று முதலிடம் பிடிக்கும் தேர்வர்களுக்கு பரிசுத்தொகை,தேர்வு எழுதுபவர்களை ஊக்கப்படுத்தும் வகையில் அரசு திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என தேர்வுக்கு தயாராகும் மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Similar News
News April 21, 2025
கடன் பிரச்சனைகளுக்கு தீர்வு தரும் காலபைரவர்

திண்டுக்கல்; தாடிக்கொம்பு பகுதியில் ஸ்ரீசௌந்தரராஜ பெருமாள் கோயில் உள்ளது. இங்கு ஸ்ரீசொர்ண ஆகர்ஷண பைரவருக்கென சன்னதி உள்ளது. மிகவும் சக்திவாய்ந்த தெய்வமாக வீற்றிருக்கும் கால பைரவரை வணங்கினால், கடன் பிரச்சனைகள் நீங்குமாம். இங்கு அஷ்டமி நாளில் 11 தீபங்கள் ஏற்றி, வணங்கி வந்தால், வறுமை மற்றும் கடன் பிரச்சனைகள் முற்றிலும் நீங்கும்.கடனில் சிக்கியுள்ள உங்களது நண்பர்களுக்கு இதை SHARE பண்ணுங்க.
News April 21, 2025
பழனியில் கஞ்சா விற்பனை செய்த 6 வாலிபர்கள் கைது!

பழனி நகர் காவல் நிலைய ஆய்வாளர் மணிமாறன் தலைமையில் காவலர்கள் தீவிர ரோந்து & கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்த போது அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி பின்புறம் கஞ்சா விற்பனை செய்த கார்த்திக்ராஜா(25), சிவக்குமார்(23), மாரிசாமி(21), அருண்குமார்(37), ஜேம்ஸ்(27), நாகேந்திரன்(27) ஆகிய 6 பேரை கைது செய்து அவர்கள் இடமிருந்து கஞ்சாவை பறிமுதல் செய்து பழனி நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.
News April 21, 2025
மின்சாரம் தாக்கி பெண் மற்றும் பசு மாடு பலி

திண்டுக்கல்: பாப்பனம்பட்டியைச் சேர்ந்த விக்னம்மாள் (50) என்பவர் தனது பசுமாட்டை மேய்ச்சலுக்காக அழைத்துச் சென்றுள்ளார். அப்போது, அப்பகுதியில் இருந்த மின்கம்பி அறுந்து அவ்வழியாக சென்ற விக்னம்மாள் மற்றும் அவரது பசுமாடு மீது விழுந்ததால் மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இதுகுறித்து தாடிக்கொம்பு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.