News September 26, 2025
வெற்றி பள்ளிகள் தொடக்க விழா: அமைச்சர் பங்கேற்பு

நாகையில் நகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் வெற்றிப் பள்ளிகள் திட்ட தொடக்க விழா நாளை(செப்.27) நடைபெற உள்ளது. இதில், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பங்கேற்று, தொடங்கி வைக்க உள்ளார். மேலும் மாவட்ட ஆட்சியர் ஆகாஷ் மற்றும் சட்டமன்றம் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இந்நிகழ்வில் பங்கேற்க உள்ளதாக, மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News January 2, 2026
நாகை: குழந்தை இறந்த சோகத்தில் தாய் தற்கொலை

கீழையூா் அடுத்த அகரம் பகுதியைச் சோ்ந்த ஐயப்பன் (35)-ரம்யா (30) தம்பதி மகன் தேவா (3). ஐயப்பன் கடந்தாண்டு உயிரிழந்த நிலையில் ரம்யா மகனை வளா்த்து வந்தாா். இந்நிலையில், எதிா்பாராதவிதமாக வீட்டுவாசலில் விளையாடிக் கொண்டிருந்த குழந்தை அருகிலுள்ள வாய்க்காலில் தவறி விழுந்து இறந்துபோனது. இதனால் மிகுந்த மனவேதனை அடைந்த ரம்யா புதன்கிழமை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.
News January 2, 2026
நாகை: ரூ.2.5 கோடிக்கு விற்பனை; புதிய உச்சம்!

பண்டிகை காலங்களில் வழக்கமாக டாஸ்மாக் கடைகளில் மதுப்பிரியர்களின் கூட்டம் அலைமோதும். இந்நிலையில் புத்தாண்டையொட்டி நாகை மற்றும் மயிலாடுதுறை மாவட்டத்தில் அமைந்துள்ள மதுக்கடைகளில் நேற்று முன்தினம் மட்டும் ரூ.2 கோடியே 58 லட்சத்துக்கு மது விற்பனை நடைபெற்றுள்ளது. இது கடந்த ஆண்டை விட ரூ.26 லட்சம் அதிகமாகும். கடந்த ஆண்டு டிசம்பர் 31-ந்தேதி ஒரே நாளில் மொத்தம் ரூ.2.32 கோடி விற்பனையானது குறிப்பிடத்தக்கது.
News January 2, 2026
நாகை: இரவு ரோந்து செல்லும் போலீசார் விவரம்

நாகை மாவட்டத்தில், நேற்று(ஜன.01) இரவு 10 மணி முதல் இன்று(ஜன.02) காலை 6:00 மணி வரை ரோந்து பணிக்கு, காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் பகுதி அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100-ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஷேர் செய்யுங்கள்!


