News March 14, 2025
வெற்றி நாயகனான கூலித் தொழிலாளியின் மகன்

சேலம்: வெள்ளாளப்பட்டியைச் சேர்ந்த மோ.அஜித். இவர் சிறுவயதிலேயே தந்தையை இழந்தவர்.தாயும் கூலித் தொழிலாளி. இத்தனை கடின சூழ்நிலைகளையும் கடந்து,அரசு பணி தேர்வுக்கு தன்னம்பிக்கையுடன் படித்து தற்போது வெற்றி பெற்றுள்ளார். இப்பொழுது இளநிலை வருவாய் ஆய்வாளராக குறிஞ்சிப்பாடி, கடலூரில் பணியமர்த்தப்பட்ட சான்றிதழை கடலூர் மாவட்ட ஆட்சியர் திரு.சிபி ஆதித்யா செந்தில்குமார் அவர்களிடம் பெற்றார். இவரை வாழ்த்தலாமே…!?
Similar News
News July 8, 2025
சேலம்: திடீரென தீப்பற்றிய எலக்ட்ரிக் பைக்!

சேலம் மாவட்டம், இளம்பிள்ளை அடுத்த வேலகவுண்டம்பாளையம் அருகே, எலக்ட்ரிக் இருசக்கர வாகனம் ஒன்று வாகனத்தின் பேட்டரியின் அதிக வெப்பத்தால், திடீரென தீப்பற்றியது. உடனடியாக அருகில் இருந்தவர்கள் துரிதமாகச் செயல்பட்டு தீயை அணைத்தனர். இதனால் அங்கு பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. இந்த தீ விபத்தால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
News July 8, 2025
‘அய்யா கேட்டால் இங்கேயே உயிரை விடுவேன்’

திண்டிவனத்தில் நடந்த பா.ம.க.வின் மாநில செயற்குழு கூட்டத்தில் பேசிய சேலம் மேற்கு தொகுதி எம்.எல்.ஏ அருள், “என்னை கட்சியை விட்டு நீக்குவதற்கோ, பொறுப்புகளை மாற்றுவதற்கோ அதிகாரமிக்கவர் மருத்துவர்.அய்யா மட்டுமே. 36 ஆண்டுகளாக அவர் காலில் கிடக்குறேன். அருளு உன் உயிர் வேண்டும் என்று அய்யா கேட்டார், இப்போதே உங்கள் முன் கழுத்தை அறுத்து உயிரை விடுவேன்” என்று உணர்ச்சி பொங்கப் பேசினார்.
News July 8, 2025
தீரா கடன்களை தீர்க்கும் நங்கவள்ளி கோயில்!

சேலம் மாவட்டம் நங்கவள்ளியில் லட்சுமி நரசிம்ம சாமி- சோமேஸ்வரசாமி கோயில் உள்ளது. இது சைவ வைணவ ஒற்றுமைக்கு எடுத்துக்காட்டாக விளங்கும் கோயிலாகும். இங்கு நரசிம்மரை, பிரதோஷ நாளான இன்று, பால், இளநீர், பன்னீர், தேன், மஞ்சள், சந்தனம், திருமஞ்சனப்பொடி, பச்சரிசி மாவு போன்ற அபிஷேகப் பொருட்களை கொண்டு அபிஷேகம் செய்தும், துளிசி மாலை சாத்தியும் வழிபட்டால், தீராத கடன் தொல்லைகள் தீருமாம். இதை SHARE பண்ணுங்க.