News January 18, 2026

வெற்றிக் கூட்டணியை பாமக அமைக்கும்: ராமதாஸ்

image

விழுப்புரம் தைலாபுரம் தோட்டத்தில் தேர்தல் வியூகம் குறித்து பாமகவின் நிர்வாகக் குழு கூட்டம் நடைபெற்றது. பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ராமதாஸ், பாமக அமைக்கும் கூட்டணி மிகப்பெரிய வெற்றிக் கூட்டணியாக அமையும் என நம்பிக்கை தெரிவித்துள்ளார். இதுதான் நாணயமான கூட்டணி என மக்கள் பேசுகின்ற அளவிற்கு கூட்டணி அமையும் என்றும், அப்படிப்பட்ட கூட்டணியை உருவாக்க தீவிரமாக முயன்று வருவதாகவும் கூறியுள்ளார்.

Similar News

News February 14, 2026

அரசு ஹாஸ்பிடலில் குழந்தை கடத்தல்… கொந்தளித்த விஜய்

image

திருச்சியில் அரசு ஹாஸ்பிடலில், பிறந்து 3 நாள்களே ஆன ஆண் குழந்தை கடத்தப்பட்டதற்கு விஜய் கண்டனம் தெரிவித்துள்ளார். தனது X பதிவில், ‘மக்களுக்கான அரசு’ என்று மார்தட்டிக்கொள்ளும் திமுக ஆட்சியில், அரசு ஹாஸ்பிடலிலேயே ஒரு தாயின் மடியிலிருந்து குழந்தை பறிபோகும் அவல நிலை என்பது ஏற்றுக்கொள்ள முடியாதது என கடுமையாக விமர்சித்துள்ளார். இந்த விவகாரத்தில் CM உடனடியாக தலையிட வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

News February 14, 2026

மகளிருக்கு மேலும் ₹5,000.. மகிழ்ச்சி தகவல்

image

மகளிர் உரிமைத் தொகை ₹3,000 + கோடைகால சிறப்புத் தொகை ₹2,000 என ₹5,000 நேற்று வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளது. இந்த மகிழ்ச்சி அடங்குவதற்குள், மேலும் ஒரு ₹5,000-ஐ மகளிரின் வங்கிக் கணக்கில் வரவுவைக்க அரசு திட்டமிடுகிறதாம். இது கடனுதவி (அ) சுயதொழில் தொடங்குவதற்கான நிதியாக இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. இருப்பினும், இதுபற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வரவில்லை.

News February 14, 2026

காங்கிரஸிடம் எந்த திட்டமும் இல்லை: பியூஸ் கோயல்

image

மக்களை நாளுக்கு நாள் தவறான அறிக்கைகளால் காங்கிரஸ் தவறாக வழிநடத்துவதாக பியூஷ் கோயல் விமர்சித்துள்ளார். மும்பையில் பேசிய அவர், சோர்வடைந்த காங்கிரஸிடம் குழப்பம் பரப்புவதை தவிர வேறு எந்த திட்டமும் இல்லை என குற்றஞ்சாட்டினார். காங்கிரஸ் மற்றும் மக்களால் நிராகரிக்கப்பட்ட அதன் கூட்டணி கட்சிகளான திமுக, திரிணாமூல் உள்ளிட்டவை எவ்வளவு முயன்றாலும், அவர்களால் PM மோடியை தடுக்க முடியாது என்று தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!