News June 4, 2024
வெற்றிக் கனியை பறிக்கும் கனிமொழி

தூத்துக்குடி தொகுதியில் போட்டியிட்ட திமுக வேட்பாளர் கனிமொழி, 3 லட்சத்திற்கும் அதிகமான வாக்குகளுடன் முன்னிலையில் உள்ளார். அவரை எதிர்த்து போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் சிவசாமி வேலுமணி 1 லட்சம் வாக்குகள் மட்டுமே பெற்று 2ஆவது இடத்தில் உள்ளார். 2019 தேர்தலில் தூத்துக்குடி தொகுதியில் போட்டியிட்ட கனிமொழி, 3 லட்சத்திற்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.
Similar News
News August 5, 2025
‘கடைசி விவசாயி’ படக்குழுவின் அடுத்த படைப்பு

காக்கா முட்டை, கடைசி விவசாயி போன்ற படங்களை இயக்கிய மணிகண்டனின் அடுத்த படத்தை பார்க்க சினிமா ரசிகர்கள் ஆவலாக உள்ளனர். இந்நிலையில் அவரது அடுத்த படைப்பு குறித்த அப்டேட் வெளியாகி உள்ளது.’முத்து என்கிற காட்டான்’ என்ற வெப் தொடரை அவர் இயக்கி, அதனை விஜய் சேதுபதி தயாரித்து நடித்துள்ளார். ஜாக்கி ஷெராஃப், யோகி பாபு ஆகியோர் இதில் நடித்துள்ளனர். விரைவில் ஜியோ ஹாட்ஸ்டாரில் இந்த வெப் சீரிஸ் வெளியாக உள்ளது.
News August 5, 2025
தவெக 2-வது மாநாடு: TVKவினருக்கு விஜய் கோரிக்கை

மதுரை மாநாட்டுக்கு தவெகவினர் பொறுப்புடனும், பாதுகாப்புடனும் கலந்துக் கொள்ளுமாறு விஜய் கேட்டுக்கொண்டுள்ளார். தவெகவின் 2-வது மாநில மாநாடு வரும் 25-ம் தேதி மதுரையில் நடைபெறுவதாக இருந்தது. விநாயகர் சதுர்த்தி வருவதால் தேதியை மாற்ற போலீஸ் தரப்பில் அறிவுறுத்தப்பட்டது. அதனை ஏற்று வரும் 21-ம் தேதி அதே பிரம்மாண்டத்தோடும், கூடுதல் உற்சாகத்தோடும் மாநாடு நடைபெறவுள்ளதாக விஜய் தெரிவித்துள்ளார்.
News August 5, 2025
கில்லை ODI அணிக்கும் கேப்டனாக்கலாம்: கவாஸ்கர்

ஆஸ்திரேலியா அல்லது வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான ஒருநாள் தொடரில் சுப்மன் கில்லை கேப்டனாக்கலாம் என கவாஸ்கர் தெரிவித்துள்ளார். கில் அணியில் அனைவராலும் விரும்பப்படும் வீரர்களில் ஒருவராக உள்ளார். ஆகவே அவரை கேப்டனாக்க இதுவே சரியான தருணம் எனவும் தெரிவித்துள்ளார். தற்போது ஒருநாள் அணிக்கு கேப்டனாக ரோஹித் சர்மா உள்ளார்.