News November 15, 2025
வெறும் ₹6-க்கு 2 நாள்களுக்கு 1GB/டே.. அரசின் PM WANI திட்டம்!

இணையவசதி என்பது அத்தியாவசிய தேவையாக மாறியுள்ள நிலையில், நாட்டின் அனைத்து மக்களும் இணையவசதி பெற, PM WANI என்ற திட்டம் செயல்படுத்தபடவுள்ளது. சிறு கடைகளையும் மக்கள் பயன்பெறும் வகையில் Wi-Fi Hub-ஆக மாற்றுவதை இந்த திட்டம் நோக்கமாக கொண்டுள்ளது. வெறும் ₹6-க்கு 2 நாள்களுக்கு 150 Mbps வேகத்தில் 1GB/ day வழங்கப்படுகிறது. PM WANI ஆப்பை டவுன்லோட் செய்து எளிதில், இந்த திட்டத்தில் சேரலாம்.
Similar News
News November 15, 2025
IPL 2026: அணி தாவிய வீரர்களின் லிஸ்ட்!

எப்போதும் இல்லாத அளவிற்கு இம்முறை IPL-ல் அதிக வீரர்கள் டிரேட் செய்யப்பட்டுள்ளனர். குறிப்பாக ராஜஸ்தான் அணி 2 வீரர்களை விட்டுக்கொடுத்து 3 வீரர்களை பெற்றுள்ளது. ஜடேஜா, சாம் கரன், சஞ்சு சாம்சன் மட்டுமன்றி வேறு சில வீரர்களும் அணிகளுக்கு இடையே டிரேட் மூலம் தாவியுள்ளனர். டிரேட் செய்யப்பட்ட வீரர்களின் விவரத்தை SWIPE செய்து பார்க்கவும்..
News November 15, 2025
‘காந்தா’ முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?

துல்கர் சல்மான், சமுத்திரக்கனி, ராணா டகுபதி, பாக்யஸ்ரீ நடிப்பில் நேற்று (நவ.14) வெளியான திரைப்படம் ‘காந்தா’. துல்கர் சல்மான் மற்றும் ராணா இணைந்து தயாரித்துள்ள இந்த பீரியட் டிராமா ரசிகர்கள் இடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்நிலையில், படம் முதல் நாளில் உலக அளவில் ₹10.5 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்துள்ளதாக படக்குழு போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளது.
News November 15, 2025
மருத்துவக் கல்லூரி முறைகேடு: EPS-க்கு எதிராக மனு

EPS-க்கு எதிராக சென்னை HC-ல் மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதிமுக ஆட்சியில் 11 மருத்துவக் கல்லூரிகள் கட்டியதில் முறைகேடு என்ற குற்றச்சாட்டு குறித்து புகார் அளித்து 5 ஆண்டுகள் கடந்தும் லஞ்ச ஒழிப்புத்துறை நடவடிக்கை எடுக்கவில்லை என, திருவாரூரைச் சேர்ந்த ராஜசேகரன் என்பவர் மனுவில் குறிப்பிட்டுள்ளார். எனவே, இதுதொடர்பாக CBI விசாரணைக்கு உத்தரவிடவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.


