News January 1, 2025

வெறிச்சோடி காணப்படும் மெரினா கடற்கரை!

image

புத்தாண்டு பண்டிகையை முன்னிட்டு, பாதுகாப்பு முன்னெச்சரிக்கையாக சென்னையில் கடற்கரைகளில் குளிப்பதற்கும், கடலில் இறங்குவதற்கும் தடை விதிக்கப்பட்டதால், மெரினா கடற்கரை வெறிச்சோடி காணப்படுகிறது. மெரினா கடற்கரையில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு கடற்கரைக்கு செல்லும் சாலைகளை தடுத்து, தீவிரமான ரோந்து பணிகளில் உள்ளனர்.

Similar News

News August 27, 2025

சென்னை: அரசு பேருந்து குறித்து புகார் அளிக்க வேண்டுமா?

image

சென்னையில் இயக்கப்படும் அரசு பேருந்துகள் குறித்து, உங்களது புகார் அல்லது குறைகளை தெரிவிக்க ‘1800 599 1500’ என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம். இதன் மூலம் பேருந்து கால தாமதமாக வருவது, நிற்காமல் செல்வது, ஓட்டுநர் அல்லது நடத்துநர் பயணிகளிடம் தரக்குறைவாக நடந்து கொள்வது குறித்து உங்களால் வீட்டிலிருந்த படியே புகார் தெரிவிக்க முடியும். இந்த தகவலை SHARE செய்து அனைவருக்கும் தெரியப்படுத்துங்க!

News August 27, 2025

BREAKING: இபிஎஸ் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்

image

சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வீட்டிற்கு இன்று (ஆக.27) வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது. இதையடுத்து, மோப்ப நாய் உதவியுடன் காவல்துறையினர் சோதனை நடத்தினர். கோவையில் பாஸ்போர்ட் அலுவலகத்திற்கும் இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடப்பட்டது. பண்டிகை நாளான இன்று அடுத்தடுத்து வெடிகுண்டு மிரட்டல் வந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.

News August 27, 2025

சென்னை: லஞ்சம் கேட்டால்.. உடனே CALL பண்ணுங்க

image

சென்னை மாவட்டத்தில் உள்ள அரசு அலுவலகங்களில் லஞ்சம் கேட்கும் அதிகாரிகள் குறித்து பொதுமக்கள் எந்தவித தயக்கமும் இன்றி புகார் அளிக்கலாம். லஞ்சம் தொடர்பான புகார்களை spnrdvac.tnpol@gov.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு விரிவாக எழுதி அனுப்பலாம். அல்லது என்ற 044-22321090, 044-22310989 எண்ணுக்கு தொடர்பு கொண்டு உங்கள் புகாரைப் பதிவு செய்யலாம். ஊழலற்ற நிர்வாகத்தை உறுதி செய்ய அனைவருக்கும் இதை SHARE பண்ணுங்க.

error: Content is protected !!