News April 11, 2024
வெயில் தாக்கம் குறையும்
தமிழகத்தில் பல மாவட்டங்களில் 100 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டி வெயில் பாதிவாகியுள்ளது. இந்நிலையில் அடுத்த வாரத்தில் சென்னையில் இயல்பான (அ) அதற்குக் கீழான வெப்ப நிலையே பதிவாகும் என தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். மேலும், 40 முதல் 41 டிகிரி செல்சியஸ் பதிவான இடத்தில் 37, 39 டிகிரி செல்சியஸாக குறையக்கூடும் என தெரிவித்துள்ளார்.
Similar News
News November 19, 2024
நாமக்கல் மாநகராட்சி நாளை சிறப்பு மருத்துவ முகாம்
நாமக்கல் மாவட்டம் நாமக்கல் மாநகராட்சி மூலம் பல்வேறு இடங்களில் தினமும் சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்று வருகிறது அதன் தொடர்ந்து நாளை புதன்கிழமை காலையில் 9:30 மணிக்கு வார்டு எண்.1 பெரிய அய்யம்பாளையம் மற்றும் காலை 11:00 மணிக்கு வார்டு எண்.8 கிருஷ்ணாபுரம் ஆகிய பகுதிகளில் நாளை சிறப்பு மருத்துவ முகாம் நடைபெறுகிறது. மருத்துவ முகாமில் பொதுமக்கள் கலந்து கொண்டு பயனடையுமாறு மாநகராட்சி தெரிவித்துள்ளது.
News November 19, 2024
நாமக்கல் தலைப்பு செய்திகள்
1.நாமக்கல் மாவட்டத்தில் முன்னாள் பிரதமர் இந்திராகாந்தியின் 107வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.
2.ரேப்கோ வங்கியின் 56 வது நிறுவன நாள் கொண்டாட்டம்
3.டூவிலரில் இருந்து முதியவர் தூக்கி வீசப்படும் காட்சி வெளியீடு
4.முத்தங்யிகில் காட்சி தந்த நாமக்கல் ஆஞ்சநேயர்
5.நாமகிரியில் சேவல் சண்டையில் ஈடுபட்ட 2 பேர் கைது
News November 19, 2024
நாமக்கல்லில் இன்று முட்டை விலை நிலவரம்
தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுவின் கூட்டம் நாமக்கல்லில் இன்று 19ம் தேதி நடைபெற்றது. இந்த கூட்டத்தில் ஒரு முட்டையின் பண்ணை கொள்முதல் விலை ரூ 5.40 என்ற அளவில் விலை நிர்ணயம் செய்யப்பட்டது. தொடர் மழை அதனால் ஏற்பட்ட குளிர் பனி உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் முட்டை நுகர்வு அதிகரித்தது இருப்பினும் விலையில் மாற்றமும் இல்லாமல் தொடர்ந்து ஒரு முட்டையின் பண்ணை கொள்முதல் விலை ரூ5.40 என்ற விலையிலேயே நீடிக்கிறது.