News April 3, 2024
வெயில் கொளுத்துவதால் காலையில் பிரச்சாரம்

திருநெல்வேலி மாவட்டத்தில் வெயில் கொளுத்துவதால் வேட்பாளர்கள் பகல் நேரங்களில் பிரச்சாரம் செய்ய சிரமப்படுகின்றனர். திருநெல்வேலி மக்களவைத் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் ராபர்ட் புரூஸ் இன்று (ஏப்ரல் 3) காலை 6 மணிக்கு தனது அலுவலகத்தில் இருந்து பிரச்சாரத்திற்கு புறப்பட்டார். காலை 7 மணி முதல் திருநெல்வேலி சந்திப்பு, சிந்து பூந்துறை, மேகலிங்கபுரம், உடையார்பட்டி, தாழையூத்து பகுதியில் பிரச்சாரம் செய்தார்.
Similar News
News February 19, 2026
நெல்லை: இழந்த பணத்தை மீட்க புகார் எண்கள்!

தற்போது உள்ள டிஜிட்டல் யுகத்தில், UPI பரிவர்த்தனை பிரபலமாக உள்ளது. இதில் தவறுதலாகப் பணம் அனுப்பிவிட்டால் கவலை வேண்டாம். உடனடியாகப் பணம் பெற்றவரைத் தொடர்பு கொள்ளவும். இல்லையெனில், Google Pay (1800-419-0157), PhonePe (080-68727374), Paytm (0120-4456-456) வாடிக்கையாளர் சேவை எண்களைத் தொடர்புகொண்டு புகார் தெரிவித்தால் உங்கள் பணத்தைத் திரும்பப் பெறலாம். SHARE பண்ணுங்க!
News February 19, 2026
நெல்லை – ஹைதராபாத் ரயில் சேவை நீட்டிப்பு

நெல்லை வழியாக கன்னியாகுமரியில் இருந்து ஹைதராபாத் வரை வெள்ளிக்கிழமை தோறும் இயக்கப்படும் சிறப்பு ரயில் சேவை மார்ச்.6 முதல் மார்ச்.27 வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. மறு மார்க்கத்தில் (எண் 07230) மார்ச்.4 முதல் மார்ச்.25 வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. இதற்கான முன்பதிவு தொடங்கியுள்ளது.
News February 19, 2026
நெல்லை: உங்கள் பட்டா யார் பெயரில் இருக்கு தெரியுமா?

நெல்லை மக்களே, இனி நீங்கள் இருக்கும் இடத்தின் பட்டா யார் பெயரில் இருக்கிறது என Google Map வைத்தே ஈஸியா தெரிஞ்சுக்கலாம். இதற்கு <


