News November 13, 2025

வெயிலில் முதலிடம் பிடித்த ஈரோடு!

image

தமிழ்நாட்டில் இன்று (13-11-25) அதிக அளவாக, ஈரோட்டில் 96.08 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவாகி உள்ளது. ஈரோடு மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்படுகிறது. இதனால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகின்றனர். இந்நிலையில் இன்று தமிழகத்தில் அதிக அளவாக ஈரோட்டில் 35.6 டிகிரி செல்சியஸ் வெயில் (96.08 டிகிரி பாரன்ஹீட்) பதிவானது.

Similar News

News November 13, 2025

கடம்பூர் அருகே யானை உயிரிழந்தது!

image

சத்தியமங்கலம் வனச்சரகம், குத்தியாலத்தூர் காப்புக்காடு, கொண்டப்பநாயக்கன் பாளையம் காவல் சுற்று, வனப்பகுதிக்குள் வனப்பணியாளர்கள் ரோந்து சுற்றி வரும் பொழுது, பெண் யானை ஒன்று இறந்து கிடந்ததை பார்த்துள்ளனர். யானை உடலில் காயங்கள் இல்லாதால் இயற்கை மரணம் என வனத்துறையினர் தெரிவித்தனர். மேலும், யானை உடல் அரசு வழிகாட்டுதல் படி பிரேத பரிசோதனை செய்யப்பட உள்ளதாகவும் தெரிவித்தனர்.

News November 13, 2025

ஈரோடு மாவட்டத்தில் 23 காவல் உதவி ஆய்வாளர்கள் மாற்றம்

image

ஈரோடு மாவட்டத்தில் பணியாற்றி வந்த 23 காவல் உதவி ஆய்வாளர்கள் (Sub-Inspectors) பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இந்த அதிரடி மாற்ற உத்தரவை ஈரோடு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுஜாதா பிறப்பித்துள்ளார். புதிதாக வெளியிடப்பட்ட உத்தரவின்படி, மாற்றம் செய்யப்பட்ட அதிகாரிகள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட புதிய காவல் நிலையங்களில் உடனடியாக அறிக்கை செய்யுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

News November 13, 2025

ஈரோடு மாவட்ட காவல் துறை எச்சரிக்கை!

image

குழந்தைகளுக்கு போன் கொடுப்பது ஆபத்தானது, ஏனெனில் இது கண் பிரச்சனைகள், தூக்கமின்மை, சமூகத்திறன் குறைவு, அறிவாற்றல் வளர்ச்சி பாதிப்பு,கதிர்வீச்சு வெளிப்பாடு, சுய சிந்தனை போன்ற பல்வேறு உடல் மனரீதியான பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும். போனின் அதிகப்படியான பயன்பாடு, குழந்தைகளின் மூளை மற்றும் வளர்ச்சிக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என மாவட்ட காவல்துறை சார்பில் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

error: Content is protected !!