News March 25, 2025
வெப்ப அலை தாக்கம் அதிகரிப்பு குறித்து தற்காப்பு முன்னெச்சரிக்கை

புதுச்சேரி சுகாதாரத்துறை இயக்குனர் ரவிச்சந்திரன் இன்று வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் வெப்பநிலை உயரும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்த நிலையில் பொதுமக்கள் நண்பகல் 12:00 மணி முதல் மூன்று மணி வரை அத்தியாவசியமான தேவை இன்றி வீட்டில் இருந்து வெளியே வர வேண்டாம் வெப்பத்தினால் ஏற்படும் அறிகுறிகளை கண்டறிந்து சிகிச்சைகளை அளிக்க அரசு மருத்துவமனைகள் தயார் நிலையில் உள்ளது என்றார்.
Similar News
News November 5, 2025
புதுவை: அதிகாரிகள் விடுவிப்பு

புதுச்சேரி பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தத்துறை சார்பு செயலர் செய்தி குறிப்பில், “சப் – கலெக்டராக பணியாற்றி வரும் ஐ.ஏ.எஸ் அதிகாரி இஷிதா ரதி கூடுதலாக கவனித்து வந்த மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் பொறுப்பிலிருந்தும், ஏனாமில் பணியாற்றி வரும் ஐ.ஏ.எஸ் அதிகாரி அங்கித்குமார் கூடுதலாக கவனித்து வரும் ஏனாம் நகராட்சி ஆணையர் பொறுப்பில் இருந்தும் விடுவிக்கப்பட்டுள்ளனர்.” என கூறியுள்ளார்.
News November 5, 2025
புதுச்சேரி: கனமழை எச்சரிக்கை!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கி தீவிரமடைந்து வரும் நிலையில், பல்வேறு மாவட்டங்களுக்கு வானிலை ஆய்வு மையம் மழை எச்சரிக்கை விடுத்துள்ளது. அந்தவகையில் புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் நாளை (நவ.6) இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. ஷேர் பண்ணுங்க!
News November 5, 2025
புதுச்சேரி: VAO பணிக்கான தேர்வு முடிவுகள் வெளியீடு

புதுச்சேரி தேர்வு அமைப்பின் தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி பங்கஜ்குமார் ஜா நேற்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் VAO மற்றும் கிராம உதவியாளர் பணிகளுக்கு தேர்வானவர்களுக்கான கணினி திறன் தேர்வு கடந்த 2-ம் தேதி நடந்தது. இதன் முடிவுகள் மற்றும் எம்.டி.எஸ் பணிக்கு தேர்வானவர்கள் பட்டியல் நேற்று (நவ.04) வெளியிடப்பட்டுள்ளது. இந்த தகவலை தேர்வு எழுதிய உங்க நண்பர்களுக்கும் ஷேர் செய்து தெரியப்படுத்துங்க…


