News March 12, 2025
வென்னிமலை கோயில் திருவிழா- போக்குவரத்து மாற்றம்

பாவூர்சத்திரத்தில் வென்னி மலை முருகன் கோவில் மாசி திருவிழாவை முன்னிட்டு பால்குடம், அழகுகுத்தி ஊர்வலம் என பக்தர்கள் அதிக அளவில் வருவதைத் தொடர்ந்து பாவூர்சத்திரம் ரயில்வே கேட் அருகே கார், ஆட்டோ செல்ல முடியாத வகையில் காவல்துறை மூலம் தடுப்பு அமைக்கப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இருசக்கர வாகனங்கள் செல்வதற்கு அனுமதிக்கப்பட்டது. மற்ற வாகனங்கள் அனைத்தும் செல்வ விநாயகர்புரம் பகுதி வழியாக விடப்பட்டது.
Similar News
News April 9, 2026
BREAKING : ஆலங்குளத்தில் ஏப்.11 கடையடைப்பு

பனைத் தொழிலாளி மீது எஸ்.ஐ நடத்திய துப்பாக்கிச் சூட்டைக் கண்டித்து ஆலங்குளத்தில் சனிக்கிழமை (ஏப்.11) கடையடைப்புப் போராட்டம் நடத்தப் போவதாக வணிகர் சங்கம் அறிவித்துள்ளது.இது தொடர்பாக வணிகர் சங்கப் பேரமைப்பின் தென்காசி மாவட்டத் தலைவர் டி.பி.வி. வைகுண்டராஜா வெளியிட்ட அறிக்கையில் இதுபோன்ற அச்சுறுத்தல்கள் இனி நிகழக்கூடாது;எஸ்.ஐ இசக்கி ராஜாவிற்கு சட்டப்படி தண்டனை வழங்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
News April 9, 2026
தென்காசி : ரயில்வேயில் 11,127 காலிப்பணியிடங்கள்

ரயில்வேயில் காலியாக உள்ள 11,127. Assistant loco pilot பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஐடிஐ, டிப்ளமோ, பி.இ/பி.டெக். படித்த 18-30 வயதிற்குட்பட்ட அனைவரும் 15.05.2026 முதல் 14.06.2026 வரை இப்பணிக்கு விண்ணப்பிக்க முடியும். இதற்கு ரூ.19,900- 63,200 வரை ஊதியம் வழங்கப்படும் நிலையில், https://www.rrbapply.gov.in/ இணையதளம் மூலம் விண்ணப்பிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.