News February 4, 2026

வெனிசுலா எண்ணெய்.. ₹2.7 லட்சம் கோடி லாபம்: SBI

image

ரஷ்யாவிற்கு மாற்றாக வெனிசுலாவிடமிருந்து எண்ணெய் இறக்குமதி செய்வதன்மூலம் இந்தியாவிற்கு ஆண்டுதோறும் ₹2.7 லட்சம் கோடி மிச்சப்படும் என்று SBI ஆராய்ச்சி அறிக்கை தெரிவித்துள்ளது. பீப்பாய் ஒன்றுக்கு $10-$12 தள்ளுபடி கிடைத்தால் மட்டுமே இது சாத்தியம் எனவும் கூறப்பட்டுள்ளது. இருப்பினும், ரஷ்யாவை ஒப்பிடும்போது வெனிசுலா வெகு தொலைவில் இருப்பதால், போக்குவரத்து செலவுகள் சுமையாகும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

Similar News

News February 5, 2026

தவெகவுடன் கூட்டணி அமைக்கும் சசிகலா?

image

அதிமுகவில் சசிகலாவை இணைக்க வாய்ப்பே இல்லை என EPS கூறிவிட்டார். இந்நிலையில், சசிகலா தனது ஆதரவாளர்களை கொண்டு தனிக் கட்சி தொடங்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மிக விரைவில் இதற்கான அறிவிப்பு வெளியாகும் எனக் கூறப்படுகிறது. எதிர்வரும் பேரவை தேர்தலில் விஜய்யின் தவெகவுடன் கூட்டணி அமைத்து போட்டியிடவும் சசிகலா திட்டமிட்டிருப்பதாகவும் பேசப்படுகிறது.

News February 5, 2026

பெயரை மாற்றினால் சாதிய பாகுபாடு மறையுமா? மதுரை HC

image

மக்களின் மனதில் உள்ள சாதியப் பாகுபாட்டை மாற்ற முயல வேண்டும் என மதுரை HC தெரிவித்துள்ளது. இதுதொடர்பான வழக்கில், தெருக்களில் உள்ள சாதிப் பெயர்களை நீக்குவதால் மாற்றம் கொண்டுவர முடியாது என்றும் கூறியுள்ளது. இதற்கு அரசு தரப்பில் மாற்றம் கொண்டு வருவதற்காகவே, முதற்கட்டமாக பெயர்களை மாற்றும் முயற்சி எடுக்கப்பட்டுள்ளதாகவும், இதனால் மக்களின் மனதில் மாற்றம் வரும் என தெரிவிக்கப்பட்டது.

News February 5, 2026

அரசு கல்லூரிகளில் 426 பணியிடங்கள்.. Apply பண்ணுங்க

image

TN-ல் உள்ள அரசு கலை & அறிவியல் கல்லூரிகளில் காலியாக உள்ள 426 கெளரவ விரிவுரையாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. கல்வித்தகுதி, நேர்முகத் தேர்வு மதிப்பீடுகளின் அடிப்படையில் ஆட்கள் தேர்வு செய்யப்படுவர். விருப்பமுள்ள நபர்கள் <>www.tngasa.org <<>>தளத்தில் பிப்.9-க்குள் விண்ணப்பிக்கலாம். இந்த பணி தற்காலிகமானது மட்டும். மொத்தம் 29 பாடப்பிரிவுகளுக்கு பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன.

error: Content is protected !!